பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 அறிவியல் தமிழ்

காட்டுவர். இதனால் அணுக்களின் திரட்சியே அண்டங்களா கின்றது என்பதை அறிகின்றோம். அறிவியலறிஞர்கள் இன்று கண்டுள்ள மெய்ம்மையினையே மெய்யுணர்வு பெற்ற நம் நாட்டுப் பெரியார்கள் அநுபவ உண்மையாகக் காட்டி யுள்ளனர்.

அண்டங்கள் எல்லாம் அணுவாக

அணுக்கள் எல்லாம் அண்டங்க ளாகப் பெரிதாய்ச்

சிறிதாயி னானும் அண்டங்க ளுள்ளும் புறம்புங்

கரியாயி னானும் அண்டங்கள் ஈன்றான் துணை என்பர்

அறிந்த நல்லோர்" என்று பரஞ்சோதி முனிவர் இறையுண்மையுடன் இணைத்துக் காட்டுவர். இங்ங்ணம் அறிவியலறிஞர்கள் ஆய்வுகள் மூலம் கண்டவற்றையே நம் தாட்டு ஞானச் செல்வர்கள் உள்ளுணர்வால் அநுபவமாகக் கண்டு அநுபவித்துள்ளனர். இவர்கள் கண்ட அநுபவ இயலும் அறிவியலறிஞர்களின் அணுவியலும் ஓரிடத்தில் சந்திப் பதை ஆய்ந்து பார்ப்போர் நன்கு அறிவர். இந்தச் சந்திப்பைத் தெளிவாக விளக்க முயல்வோம் இக்கட்டுரை யில். அணுக்கோயிலின் முன்நிற்கும் விஞ்ஞானிகளும் அண்டக்கோயிலின் முன் நிற்கும் மெய்ஞ்ஞானிகளும் ஒரே உண்மையைக் காண்கின்றனர் என்பதை நாம் அறியுங்கால் எல்லையற்ற மகிழ்ச்சியடைகின்றோம்; இறைவன் படைப் பின் விந்தையை எண்ணி எண்ணி வியப்படைகின்றோம்.

அண்டங்களின் அமைப்பு: முதலாவதாக அண்டங் களின் அமைப்பைக் காண்போம். இந்த அகிலத்திலுள்ள (Universe) அண்டங்கள் யாவும் கதிரவ மண்டலத்தில் STMAAAASAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSLSSSMMSSSS

2. பரஞ்சோதியார்: திருவிளையாடல்-பாயிரம்-6.