பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அணுவில் ஆனந்தக் கூத்து 37

அமைந்துள்ளன. வாணவெளியில் எத்தனையோ அண்டங் கள் உள்ளன. மணிவாசகப் பெருமானும்,

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன." என்ற இவற்றின் தொகையைக் கூறியுள்ளமை ஈண்டு கருதத்தக்கது. கண் சிமிட்டும் கோடானுகோடி விண் மீன்கள் ஒவ்வொன்றும் நமது சூரியனுக்கு ஒப்பானவை. ஒவ்வொன்றுக்கும் பேருருவமும் சுயஒளியும் உண்டு. அத்தனையும் அண்டங்களே. அவை அளப்பரும் சேய்மையி லிருப்பதால் பேராற்றல் மிக்க ஒரு தொலை நோக்கியில் (Telescope) கூட அவை சிறு சிறு புள்ளிகள் போல் தோற்று கின்றன. கதிரவ மண்டலத்தில் நாம் காண்பதென்ன? கதிரவன் நடுவில் அமைந்திருக்கின்றான். அவனைச் சுற்றி புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன் சனி, யுரேனஸ் நெப்தியூன், புளுட்டோ ஆகிய கோள்கள் இதே வரிசை முறையில் அமைந்துள்ளன. நமக்கும் (பூமி) சூரியனுக்கும் இடையிலுள்ள புதனையும் வெள்ளியையும் அகக்கோள் கள் என்றும், செவ்வாய் முதல் புளுட்டோ ஈறாகவுள்ள கோள்கள் நமக்கப்பால் அமைந்திருப்பதால் அவை புறக் கோள்கள் என்றும் வழங்குகின்றோம். அவை யாவும் கதிரவனைச் சுற்றி அயனப்பாதையில் (Orbit) வெவ்வேறு வேகங்களில் சுற்றி வந்து கொண்டுள்ளன.

சென்னை போன்ற பெரு நகரங்களிலுள்ள சாலைகள் போக்குவரவுக்காகப் பல பத்திகளாகப் பிரிக்கப் பெற் றுள்ளன அல்லவா? சாலையின் நடுவிலுள்ள பத்திகளில் வேகமாக ஒடும் மோட்டார் வண்டிகள்தாம் செல்லலாம்.

3. திருவாசகம்-திருவண்டப்பகுதி அடி: (1-4)