பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுவில் ஆனந்தச் சுத்து 39

வினாடிகளில் ஆவியாக மாறிவிடும் என்றும் அறிவியலறிஞர் கள் ஒருவாறு கணக்கிட்டுக் கூறுகின்றனர்.ஒவ்வோர் ஆண்டி லும் சூரியனுடைய வெப்பத்தால் பூமியின் மீதுள்ள கடல், ஆறு, குளம் இவற்றினின்றும் 49 கோடி டன் நீர் ஆவியாக மாறுகின்றது. வானத்தில் ஒரு மைல் உயரத்தில் இந்த ஆவி மேகமாக மாறுகின்றது. மேகம் குளிர்ந்து மழையாகப் பூமியின் மீது கொட்டுகின்றது. மழையின் துணையால் தாவரங்களும் பிராணிகளும், மக்களும் உயிர்பெற்று வாழ் கின்றனர்.

மழை நீரினால் ஏரிகளும் குளங்களும் நிரம்புகின்றன. ஆறுகள் பெறுக்கெடுத் தோடுகின்றன. நீரோட்டத்தைத் தேக்கி மின்னோட்டத்தை விளைவித்துஅதை மனிதன் தன் வாழ்க்கைக்குப் பலவழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளு கின்றான். உலகிலுள்ள எல்லா ஆறுகளிலும் ஓடுகின்ற நீரின் ஆற்றலைக் கொண்டு சுமார் முப்பத்தைந்து கோடிக் குதிரைத் திறன் அளவு ஆற்றலைப் பெறலாம் என்று மதிப் பிடுகின்றனர். கதிரவன் வெப்பத்தையொட்டியே காற்று கன் வீசுகின்றன; காற்றின் ஆற்றல் குறைந்த அளவு பயன் படுகின்றது. மின்னலில் உண்டாகும் மின்னாற்றவைக் கட்டுப்படுத்த இன்னும் அறிவியலறிஞர்கள் வழி வகுக்க வில்லை. ஒவ்வொரு மின்னலிலும் சுமார் 1000 குதிரைத் திறன் அளவு ஆற்றல் வெளிப்படுவதாகவும் உலகின் பல பாகங்களில் வினாடி யொன்றுக்குச் சராசரி பதினாறு மின்னல்கள் ஏற்பட்டு வருவதாகவும் மதிப்பிடப் பெற் றுள்ளது.

கதிரவனிடமிருந்து பெறும் ஆற்றலைத் துணை கொண்டே, தாவரங்கள் வேதியியல் செயல்களை விளை வித்து ஆண்டுதோறும் பத்தாயிரம் மிலியன் டன் மரத் தையும் பலநூறு மிலியன் டன்கள் கோதுமை, அரிசி, ஏனைய உணவு வகைகள் ஆகியவற்றையும் உற்பத்தி செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/41&oldid=534060" இலிருந்து மீள்விக்கப்பட்டது