பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


本翰 அறிவியல் தமிழ்

கின்றன. முன்னொரு காலத்தில் சூரிய வெப்பத்தால் வளர்ந்து கால பேதத்தால் பூமிக்குள் புதையுண்டு போன மாபெரும் மரங்கள் பாறைகளின் அதிக அழுத்தத்திற்கும் பூமியின் வெப்பத்திற்கும் உட்பட்டு நிலக்கரியாகவும் பெட் ரோலியமாகவும் மாறிக் கனிகளினின்றும் (Mines) கிடைக் கின்றன. இவற்றைக் கொண்டு இரயில் வண்டிகளையும் மோட்டார் வண்டிகளையும் இயக்குகின்றோம். இவற்றை யெல்லாம் ஆழ்ந்து நோக்கின் கதிரவனே உலகின் ஆற்றல் மூலம் என்பது தெரிகின்றது.

இனி, அணுவின் அமைப்பை நோக்குவோம். அணு மிகமிக நுண்ணிய துகள். பேராற்றல் வாய்ந்த நுண் பெ ருக் கி யா ல் (Microscope) காண முயன்றாலும் அது நமது ஊனக் கண்ணுக்குப் புலனாவதில்லை. அரைக் கோடி அணுக்களை அணிவகுத்து நிற்க வைத்தால் அவை நாம் எழுதும்பொழுது வைக்கும் ஒரு சிறு மூற்றுப் புள்ளியினுள் அடங்கிவிடும். எனினும், அறி வியலறிஞர்கள் மிகச் சிறிய அணுவின் அளவினையும் கணக்கிட்டுள்ளனர். ஒர் அங்குலத்தினை இருபத் தைந்து கோடி அளவுகளாகப் பங்கிட்டால் கிடைக்கும் அளவே அணுவின் குறுக்களவாகும் என்று கண்டுள்ள னர். பெரிய அணுவின் குறுக்களவு இதனைவிட இரண் உரை மடங்கு பெரியது: அஃதாவது, ஒர் அங்குலத்தினைப் பத்துக் கோடியாகப் பங்கிட்டதில் ஒரு பங்காகும் அது. ஒரு திராட்சைப் பழத்திலுள்ள ஒவ்வோர் அணுவும் ஒர் அங்குல விட்டமுள்ள பந்துபோல் பெருக்கமடைவதாகக் கற்பனை செய்து கொண்டால், அந்தத் திராட்சைப் பழம் நம் பூமியளவு உப்பிப் பெருக்கமடைந்துவிடும். விருப்பம் போல் ஓர் உருவத்தைப் பருக்கச் செய்யும் மகிமாச் சித்தர் ஒருவர் ஒரு கையில் ஒரு நீரிய அணுவையும் மற்றொரு கையில் ஒரு சிறு பந்தினையும் வைத்துக்கொண்டு ஒரே