பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அணுவில் ஆனந்தக் கூத்து 41

வீதத்தில் இரண்டினையும் விம்மிப் பெருக்கமடையச் செய்து கொண்டுபோனால், பந்து இவ்வுலக அளவு பெரி தாக விம்மித்தோன்றும் பொழுது, அணு பந்து அளவுதான் பெருக்கமடையும். பந்திற்கும் உலகிற்கும் எவ்வளவு வேற்றுமை! இவற்றிலிருந்து அணுவின் நுட்பத்தை ஒரளவு தெளிவாக அறியலாம்.

அணுவின் நடுவிலிருப்பது 2.1.5@5 (Nucleus); அதில் புரோட்டன்களும் சிலவகை அணுக்களில் புரோட் டான்களுடன் நியூட்ரான்களும் அடங்கியுள்ளன. உட் கருவினைச் சுற்றியுள்ள பல வட்டங்களில் எலக்ட்ரான்கள் சுழன்று கொண்டுள்ளன. இந்த வட்டங்கள் வெவ்வேறு தூரங்களில் அமைந்துள்ளன. கதிரவ மண்டலத்தில் சூரியனைச் சுற்றிப் பல வட்டங்களில் வெவ்வேறு தூரங் களில் கோள்கள் அமைந்திருப்பது போலவே, உட்கரு வினைச் சுற்றிப் பல வட்டங்களில் பல்வேறு தூரங்களில் எலக்ட்ரான்கள் அமைந்துள்ளன. உட்கருவிலுள்ள புரோட்டான்கள் நேர்மின்னூட்டம் கொண்டவை; நியூட்ரான்களுக்கு மின்னூட்டம் இல்லை; வட்டங்களி லுள்ள எலக்ட்ரான்கள் எதிர் மின்னூட்டம் பெற்றவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் எடையில் சமமுன் ளவை. எலக்ட்ரான்கள் புரோட்டான் அல்லது நியூட் ரானின் எடையில் 1840 இல் ஒரு பங்கு எடையையே பெற் றுள்ளன. ஒர் அணுவில் ஓர் எலக்ட்ரான் இருப்பின் ஒரு மின் னுாட்டம் இருக்கும்; இரண்டு எலக்ட்ரான்கள் இருப்பின் இரண்டு மின்னூட்டமாகும். எ ல க் ட் ர | ன் க ளி ன் எண்ணிக்கை வளர வளர அணுவின் மின்னூட்டமும் படிப் படியாக வளர்ந்து கொண்டே போகும். ஓர் அணுவில் உட்கருவினைச் சுற்றிக் கோன் நிலையில் சுழன்று வரும் எலக்ட்ரான்கள் ஒன்றிலிருந்து படிப்படியாக 32 வரையிலும் உயர்ந்து கொண்டே போகின்றன. இதனால்தான்

3 – نيغ. يعي