பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அறிவியல் தமிழ்

அணுக்களின் வகையும் 92 ஆயிற்று. ஓர் அணுவில் புரோட் டானோ எலக்ட்ரானோ வந்தால் மின்னூட்டம் மாறும்; நியூட்ரான் வந்தால் அது மாறுவதில்லை; இதன் வருகை யால் அணுவகையும் மாறுவதில்லை. ஆனால் அணுவின் எடையில் மட்டிலும் மாற்றம் நிகழ்கின்றது.

இன்று கண்டறியப்பட்ட 92 தனிமங்களின் அணுக் களில் மிகச் சிறியது நீரிய அணு (Hydrogen atom); மிகப் பெரிய அணு யுரேனிய அணு. நீரிய அணுவின் உட்கருவில் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. வட்டத்தில் ஒரே ஒர் எலக்டரான் சுற்றுகின்றது. யுரேனிய அணுவின் உட் கருவில் 92 புரோட்டான்களும் 143 நியூட்ரான்களும் செறித் துள்ளன. அதைச் சுற்றியுள்ள ஏழு வட்டங்களில் 92 எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. ஏனைய அணுக்கள் யாவும் இந்த இரண்டு அணுக்கட்கும் இடைப்பட்டவை. இந்த அணுக்களில் எலக்ட்ரான்களின் அமைப்பு ஒர் ஒழுங்கில்தான் உள்ளது. இந்த அணுக்களின் உட் கருவினைச் சுற்றியுள்ள வட்டங்களும் அதிகரிக்கின்றன. உட்கருவினுக்கு அடுத்துள்ள முதல் வட்டத்தில் 2 எலக்ட் ரான்கள் தாம் இருக்கக் கூடும். இரண்டாவது வட்டம் 8 எலக்ட்ரான்களைக் கொள்ளும். அதற்கு அடுத்த மூன்றா வது வட்டமும் 8 எலக்ட்ரான்களைத் தான் கொள்ளும். நான்காவது ஐந்தாவது வட்டங்கள் ஒவ்வொன்றிலும் 18 எலக்ட்ரான்களையும், ஆறாவது ஏழாவது வட்டங்கள் ஒவ்வொன்றிலும் 32எலக்ட்ரான்களையும் கொள்ளும். இந்த எண் வரிசைகளை உற்று நோக்கினால் அடியிற் கண்டவாறு ஒரு பொருத்தமும் காணப்படுகின்றது.

{{x})2=2.1” = 2 (2×2)2=2.2"=8 (3x3)2=2.3" = 18 (4×4)2=2.4"=32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/44&oldid=534063" இலிருந்து மீள்விக்கப்பட்டது