பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அணுவில் ஆனந்தக் கூத்து 43

1, 2, 3, 4 என்ற நான்கின் மடக்கெண்களை இரண்டால் பெருக்கிய தொகையாக இவை வருகின்றன. இந்த வட்டங்களில் முதல் நான்கு வட்டங்களே முழுதும் நிரம்பியுள்ளன. ஐந்து, ஆறு ஏழு வட்டங்கள் கனமுள்ள அணுக்களில்வரும் வட்டங்களாகும். இவை முழுதும் நிரம்பி இருப்பதில்லை. இந்த மேல்நிலை வட்டங்களில் வெளிப் புறத்தில் இருக்கும் மண்டலம் மேற்காட்டிய கணக்குப்படி 18 அல்லது 32 எலக்ட்ரான்கள் கொண்டு விளங்க வேண்டும் என்றிருப்பினும் எந்த வெளிப்புற வட்டத்திலும் 8 எலக்ட்ரான்களுக்கு மேல் இருப்பதில்லை என்பது அறியத் தக்கது.இந்த வெளிப்புற வட்டத்திலுள்ளஎலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கொண்டுதான் ஒரு பொருளின் வேதியியல் நாட்டம் (Chemical afinity) அறுதியிடப் பெறுகின்றது.

அணுவில் மிகச் சிறியது நீரிய அணு என்பதை மேலே குறிப்பிட்டோம். அதன் குறுக்களவு ஓர் அங்குலத் தில் பத்துக் கோடியில் ஒரு பங்கைக் காட்டிலும் குறை வானது. ஆனால், அதன் உட்கருவின் குறுக்களவு இதில் 20,000-இல் ஒருபங்குதான். அஃதாவது உட்கருவின் குறுக் களவினைக் காட்டிலும் அணுவின் குறுக்களவு20,000மடங்கு பெரியது.எலக்ட்ரானின் குறுக்களவு அணுவின் குறுக்களவில் ஐம்பதாயிரத்தில் ஒரு பங்கு. புரோட்டானின் குறுக் களவு எலக்ட்ரானின் குறுக்களவில் இரண்டாயிரத்தில் ஒரு பங்கு. ஆனால் புரோட்டான் எலக்ட்ரானைவிட 1840-மடங்கு கனமுடையது. எடையிற் பெரிய உட் கரு எடையிற் சிறிய எலக்ட்ரானைவிடப் பரிமாணத்தில் சிறியதாக இருப்பது ஒரு வியப்பு. அணுவின் எடை முதுவதும் அதன் உட்கருவிலேயே அடங்கிக் கிடக் கின்றது.

ஒர் அணுவின் அளவினைப் பெரிதாக்கி அதன் பரப்பை இருபது மீட்டர் விட்டமுள்ள வட்டத்தில்