பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பன் கண்ட மெய்ப்பொருள்*

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்றார் வள்ளுவப் பெருந்தகை. பொருளல்லவற்றைப் பொருள் என்று உணரும் திரிபுணர்ச்சியால் பெரும்பாலான மக்கள் உண்மைப் பொருளை உணர முடிவதில்லை. மெய்ப்பொருள் காணும் அறிவு எல்லோர் மாட்டும் அமைவதுமில்லை. எப்பொருள் எத்தன்மையதாயினும் அப் பொருளின் உண்மைநிலையைக் காணும் அறிவுத்திறன் கம்பன் போன்ற மேதையரிடம் மட்டிலுந்தான் அமைந்து கிடக்கும். பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து நின்ற உண்மையைக் காண்பது சிறந்த கவிஞனுக்கே இயலும். இதனைக் கம்பநாடனே,

'கவிக ளாகுவர்

காண்குவர் மெய்ப்பொருள்"

என்று பிரகலாதன் வாய்மொழியாகக் கூறியிருத்தல் ஈண்டுக் கருதத் த க் க து. “ள வ ரு ம் ஆழ்ந்த மெய்ப்பொருள் அறிவின்றி என்றுமே பெருங்கவிஞனாகத் திகழ்ந்ததில்லை" என்பது கோலரிட்ஜ் என்ற ஆங்கில அறிஞரின் கருத்தும் இஃதுடன் வைத்து ஒப்புநோக்கத் தக்கது.

  • இந்தியப் பல்கலைக் கழகத் தமிழ் ஆசிரியர் ல் மாநாட்டில் (மதுரை 1969) ಘೀ முத

2. கம்பரா. யுத்த-இரணியன் விதை-32.

3. அடுத்த பக்கம் கிாண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/50&oldid=534069" இலிருந்து மீள்விக்கப்பட்டது