பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 அறிவியல் தமிழ்

பிரகிருதியை மூலப் பகுதி என்பர். ஈசுவரன் என்பது, இறைவன். இவை மூன்றும் தனித்தனி இயல்புடைய வேறு வேறு பொருள்கள்; என்றும் அழிவில்லாதவை. ஆயினும், எக்காலத்தும் இவை மூன்றும் சேர்ந்தே காணப்பெறும். இவற்றுள் இறைவன் சித்து, அசித்து இவை இரண்டனுள்ளும் அந்தர்யாமியாக உள்ளான். இதுவே இவற்றின் நுண்ணிய (சூக்கும) நிலை. மூலப்பகுதி விரிவடைந்து மக்கள், விலங்கு முதலியவற்றின் உடம்பு களாகவும், மற்றுமுள்ள பொருள்களாகவும் ஆகின்றது.

உயிர், தன்னுடைய புண்ணிய பாவங்கட்கேற்ப ஒவ்வோருடம்பை அடைகின்றது. இதுவே உயிருக்குப் பிறப்பாகும். இறைவன், மூலப்பகுதியின் விகாரமாகிய எல்லாப் பொருள்களுள்ளும் எல்லா உயிர்களுள்ளும் அந்தர்யாமியாக மறைந்துள்ளான். இதுவே இவற்றின் பருநிலை (துலநிலை). மூலப் பகுதியின் விகாரமாகிய உடம்பிற்கு வளர்தல், பருத்தல், குறைதல் முதலிய விகாரங்கள் உண்டு. இவ்வுடலினுள்ளிருக்கும் உயிருக்கு அத்தகைய விகாரம் ஒன்றும் இல்லை. ஆயினும், உயிர் தான் செய்த கன்மங்கட் கேற்ப உடம்பைப் பெற்றிருத் தலால், அவ்வுடம்பைப்பற்றிய இன்ப துன்ப உணர்ச்சிகள் அவ்வுயிருக்கு உண்டு. இவ்வுடம்பினுள்ளும் உயிரினுள்ளும் அந்தர்யாமியாக உள்ள இறைவன் உடம்பினுடைய விகாரங்களையும்,உயிரினுடையஇன்பதுன்ப உணர்ச்சிகளை பும் அடைவதில்லை.

இறைவன் வினைகாரணமாக அன்றி தன் விருப்பின் காரணமாக இவ் விரண்டனுள்ளும் அமைந்திருப்பவனா தலால், அவ்விரண்டின் தன்மைகளையும் அவன் அடைவி தில்லை. உயிர் மூலப்பகுதியின் விகாரமாகிய உடம்பைத் தனக்கு உடம்பாகக் கொண்டிருத்தல் போல், இறைவன்