பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 அறிவியல் தமிழ்

கருமுகில் கொழுந்துஎழில் காட்டும் சோதியைத் திருவுறப் பயந்தனன் திறங்கொள் கோசலை’’’ என்று கூறுவன். பிரளயகாலத்தில் எல்லாவுலகங்களையும் தன் திருவயிற்றில் மறைத்து வைப்பவன் நாராயணன்; உலகம் உண்ட பொருவாயன்;" பாலனாய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலையில் அன்னவசம் செய்யும் அண்ணல் அவன்". நான்மறைகளாலும் உணர முடியாத அவனை, அந்த அஞ்சனக் கருமுகிலை, கோசலை மகனாகப் பெற்றாள். இதனையே பிறிதோரிடத்தில்,

"எழுதரிய திருமேனிக்

கருங்கடலைச் செங்கனிவாய்க் கவுசலையென் பாள்பயத்தாள்'

என்று மேலும் வற்புறுத்துவன். இக்குழந்தைக்கு இராமன்' எனப் பெயரிடப் பெற்றது என்பதைக் கூறும் கவிஞன் இதனை வலியுறுத்துகின்றான்.

”கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே

அராவனை யில்துயில் வோய் என அந்நாள் விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே

'இராமன் எனப்பெயர் ஈந்தனன் அன்றே.'

(கராம்-முதலை; கைக்கரி.யானை, அராவனைய பாம்புப் படுக்கை),

முதலை வாயில் அகப்பட்ட களிறு 'ஆதிமூலமே எனக் கூவ, அதனை முன்வந்து அளித்த திருமாலே இராமனாகப் பிறந்தான் என்பது சுண்டு மீண்டும் வலியுறுத்தப் பெறு வதைக் காண்க. இதே கருத்து விராதன் வாய் மொழி யாகவும்,

سسسسسسسسس موسسه همسلسحسعسسسسسسسسسه

5. பால-திருவ 2-10:3 6.திருவாய் 6.10:1.7.திருவாய் 4:21, 8.பால-குலமுறை-20, 9.பால-திருவ. 119.