பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கம்பன் கண்ட மெய்ப்பொருள் 53

“கடுத்துநிமிர் கராம்கள்.வக்

கையெடுத்து மெய்கலங்கி உடுத்ததிசை அனைத்தினும் சென்(று)

ஒளிகொள்ள உறுதுயரால் அடுத்தபெருந் தனிமுலத்து

அரும்பரமே பரமேஎன்று எடுத்தொருவா ரணம் அழைப்ப நீயோ வந் தேன் என்றாய்" 1.கராம்-முதலை.)

என்று வந்துள்ளது. சனகன் மாளிகையில் இராமன் திருப்பள்ளி எழுதலைக் கூறவந்த கவிஞன்,

'கொல்லாழி நீத்தங்கோர் குனிவயிரச்

சிலை தடக்கைக் கொண்ட கொண்டல் ’**

(ஆழி-சக்கரம்படை)

என்று கூறுவன். பாற்கடலில் துயிலும் பரந்தாமனே சக்கரப் படையை நீத்துவிட்டு கோதண்டத்தைத் திருக்கையில் கொண்ட முகில் வண்ணன்' என்று கூறு வதனால் இக்கருத்து மேலும் அரண் செய்யப்பெறுவதைக் காண்க. இன்னும்,

"பஞ்சனை பாம்பனை யாகப்பள்ளிசேர்

அஞ்சன வண்ணனே இராமன்'

என்று சங்கரன் கொடுத்த வாளால் இராவணனால் சிறகொடிக்கப் பெற்ற சடாயு வாக்கில் வைத்துக் கூறப் பெற்றுள்ளதை எண்ணி உணர்க. திருமாலே இராமனாக அவதரித்துள்ளான் என்பதை,

10. ஆரணி, விராதன் வதை, 49 11. பால, மிதிலை. 154 12. ஆரணி, சடாயுவுயிர்நீத்த 142