பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 அறிவியல் தமிழ்

"சங்கு சக்கரக் குறியுள

தடக்கையில் தாளில் எங்கும் இத்தனை இலக்கணம்

யாவர்க்கும் இல்லை செங்கண் வில்கரத்து இராமன் அத்

திருநெடு மாலே’’’

என்று அதுமன் வாக்கிலும் வந்துள்ளமை காண்க.

இறைவன் பிறப்பில்லாதவன்; ஆனால் பல பிறப்பு களையுடையவன். -

பிறப்பில் பல்பிறவிப் பெருமான்'

என்பது ஆழ்வார் வாக்கு. பிறப்பில்லாதவன் என்றது ஏனையோரைப்போல் வினை காரணமாகப் பிறக்கும் தன்மையில்லாதவன் என்றவாறு. பல பிறவிகளையுடை யவன் என்றது அடியார்கள் பொருட்டாகப் பல பிறப்புகளை (அவதாரங்களை) மேற்கொள்பவன் என்ற படி. இதுவே அவதார இரகசியம். கம்ப நாடன் இதனை நான்முகன் வாக்காக,

தோற்றம் என்பதொன்று உனக்கில்லை"

என்று கூறுவன். இராமனது பிறப்பினைக் கூறும் பகுதி யில் இதனை விளக்கமாகக் காணலாம். பிறிதோர் فسه தில் இராமனைக் குறிப்பிடுமிடத்து,

"மெய்யே பிறந்தேயும் பிறந்தி லா தான்

என்று இக் கருத்தினை மேலும் வற்புறுத்துவன்.

"T3" floo, soloaro. 79

  1. 4. ధ్చే; 15. யுத்த, மீட்சி. 107 16. யுத்த. காகபாசப். 222