பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் கண்ட மெய்ப்பொருள்

61

“ஓயாத மலரயனே முதலாக உளராகி
மாயாத வானவிர்க்கும் மற்றொழிந்த மன்னுயிர்க்கும்

நீயாகின் முதல்தாதை நெறிமுறையால்”[1]

என்று பின்னும் வற்புறுத்துவன். இக்கருத்துகள்,

“தான் ஓர் உருவே தனிவித்தாய்
       தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
       மற்றும் மற்றும் முற்றும் ஆய்”[2]

என்ற ஆழ்வார் பாசுரக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு வந்திருப்பது கண்டு மகிழத்தக்கது.

இறைவன் இவ்வுலகத்தைப் படைக்கும்பொழுது யாதொரு விகாரமும் அடைவதில்லை.[3] இக்கருத்தைக் கம்பநாடன்,

“அண்டம் பலவும் அனைத்துயிரும்
       அகத்தும் புறத்தும் உளவாக்கி
உண்டும் உமிழ்ந்தும் அளந்திடந்தும்
       உள்ளும் புறத்தும் உளையாகிக்
கொண்டு சிலம்பி தன்வாயில்
       கூர்நூல் இயையக் கூடுஇயற்றிப்
பண்டும் இன்றும் அமைக்கின்ற

       படியை ஒரு வாய் பரமேட்டி”[4]

என்று தேவர்களின் வாய்மொழியாகக் கூறுவன். "ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் ஸ்ர்வ லியக்திக்குக்-

———————

  1. ஆரணி, கவந்தன் வதை-53
  2. திருவாய் 1.5:4 41.
  3. தத்துவத்திரயம் ஈசுவரப் பிரகரணம்-கு.26
  4. யுத்த பிரமாத்திரப்.226