பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 - அறிவியல் தமிழ்

எனக் கூறுவன். அலங்கலைக் கண்டு இரவு என மருளுதல் திரிபுணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. ஐந்து பூதங்களும் தனித் தனியே இருக்கும் தன்மையை விட்டு ஒன்றாகச் சேர்வ தனாலும், அங்ங்ணம் சேர்ந்த சேர்க்கை அறுவகையாக விகாரப்படுவதனாலும், தேவர், மனிதர், விலங்கு, தாவரம் என்னும் பாகுபாடு கொள்வதனாலுமான இந்த உலகத் தோற்றம் மக்களிடம் திரிபுணர்ச்சியை உண்டாக்குதல் கூடும். இந்தத் திரிபுணர்ச்சி உண்மைப் பரம்பொருளைக் கண்ட மாத்திரத்தில் ஒழிந்துவிடும் என்று கூறுவன் கவிஞன்.

பிறிதோரிடத்தில் இந்த உடல்-உயிர் உறவுபற்றிய சுருத்து மிகத் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளது.

"மூன்றுரு எனக்குணம் மும்மை யாம் முதல்

தோன் ஒரு எவையும்.அம் முதலைச் சொல்லுதற்கு ஏன்றுரு அமைந்தவும் இடையின் நின்றவும் சான்றுரு உணர்வினுக்(கு) உவந்த தாயினான்'

(முதல்-மூலப் பிரகிருதி; தோன்று உரு-மூலப்பகுதியில் தோன்றும் எல்லாத் தத்துவங்கள்; ஏன்றுரு-வடிவமைந்த அகிலம்; இடையில் நின்றவும்-சீவர்கள்; சான்ற உரு-சிறந்த சரீரம்).

என்ற பாடலில் இந்த விளக்கத்தைக் காணலாம். மூலப் பிரகிருதியும், அதில் தோன்றும் சேதநா சேதநங் களின் வடிவமான எல்லாப் பிரபஞ்சமும் இறைவனுக் குத் திருமேனியாகும் என்பது கருத்து. மூலப் பிரகிருதி பினின்றும் தோன்றும் தத்துவங்கள் 24 என்பதை,

51. கிட்கிந். காப்பு.