பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கம்பன் கண்ட மெய்ப்பொருள் 55

'பொங்கு ஐம்புலனும் பொறிஐந்தும்

கருமேந், திரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிரி ஏய் பிரகிருதி

மான் ஆங் காரம் மனங்களே.”*

என்ற ஆழ்வார் பாசுரம் விளக்கும். அவைகவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் ஆகிய புலன் ஐந்தும்; மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறி ஐந்தும்; வாக்கு, கால், கை, பாயு, உயத்தம் ஆகிய கருமேந்திரியம் ஐந்தும், மண், நீர், எரி, கால், வான் என்னும் பூதங்கள் ஐந்தும்; இங்குள்ள இந்த ஆன்மாக்கள் பொருந்தியுள்ள மூலப்பிரகிருதி ஒன்றும்; மகத் தத்துவம் ஒன்றும்; அகங்கார தத்துவம் ஒன்றும்; மனம் ஒன்றும் ஆக 24. இவற்றுடன் ஆன்மா (புருடன்), இறைவன் (ஈசுவரன்) ஆகிய இரண்டும் சேர விசிட்டாத்வைத தத்துவங்கள் 26 ஆகின்றன.

படைப்புக் காலத்திற்கு முன்னர் சேதநா சேததங்: ளெல்லாம் தன் திருமேனிக்குள் வியாபித்து நிற்கப் பரட் பொருள் ஒன்றே தனித்து நிற்கும். அந்தப் பரம்பொருள் 'பலவாக ஆகக்கடவேன்’ என்று சங்கற்பங்கொண்டு இவ்வுலகத்தை யெல்லாம் தன் திருமேனியினின்றும் விரியச் செய்யும். இங்ஙனம் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்ற நால்வகைப் பிறவியாகத் தோன்றிய பொருள்தோறும் இறைவன் மறைந்து அந்தர்மியாகப் பரந்துள்ளான். இதனைக் கம்பநாடன் இந்திரன் வாய் மொழியாக,

“ஒன்றாகி மூலத்(து) உருவம் பலவாகி உணர்வும் உயிரும் பிறிதாகி ஊழி

52. திருவாய், 10.7:10