பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கம்பன் கண்ட மெய்ப்பொருள் 57

அலகி லாவிளை யாட்டுடை யார்.அவர் தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.'

என்று கூறுவன். இங்கு உளவாக்கல் என்பது சூக்கும வடிவினவாகவுள்ளவற்றைத் துரலவடிவினவாகச் செய்தல்; இல்லாததை உண்டாக்குவது அல்ல. இஃது உள்ளது போகாது, இல்லது வாராது என்னும் சத்காரியவாதம்'; சூனிய வாதத்துக்கு மறுதலை. இத்தொழில்களைச் சிறார் மணல் வீடு கட்டி அழிக்குமாப் போலே கேவல விளையாட்டாகவே நிறைவேற்றுவான் இறைவன் ’ இதனையே பிறிதோர் இடத்தில் கம்பநாடன்,

'உலகம் யாவையும் படைத்து அளித்து

உண்டு உமிழொருவன்'

என்றும், மற்றோர் இடத்தில்,

"காட்டுவாய் உலகம் காட்டிக்

காத்தவை கடையிற் செந்தி ஊட்டுவாய் உண்பாய் நீயே"

என்றும் வற்புறுத் துவன்.

ஆயிரம் பெயருடையவன். இறைவன் அநந்த கல்யாண குணங்களையுடையவன்; அவன் பெருமைகள் பேசி முடியா.

57. கம்ப. தற்சிறப்புப்பாயிரம்-1, 58. முன்பில்லாதது இடையே தோன்றாது என்றும், காரியம்.அழிந்த காலத்தும் காரிய வடிவம் காரணத்தில். அழியாது சூக்குமமாய் நிலைத்திருக்கும் என்றும் வாதித்து நிலைநாட்டுவது.

59. தத்துவத்திரயம்-ஈசுவரப் பிரகரணம். சூத் 22, 24 60. பால். அகலிகைப்-7 6. யுத்த வருணனை வழிவேண்-59