பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 அறிவியல் தமிழ்

இவற்றை அடக்கிக் கொண்டு அவன் ஆயிரத்திற்கு மேற் பட்ட (எண்ணற்ற) பெயர்களைத் தாங்கி நிற்கின்றான். கம்பநாடன்,

'தினையும் தேவர்க்கும் நமக்கும்ஒத்

தொருநெறி நின்ற

அணசன் அங்சணன் ஆயிரம் பெயருடை அமலன்'"

என்று இராமனைக் குறிப்பிடுவன். மண்ணுலகில் பிறந்து விசேட அறிவைப் பெறாத நம்மைப்போலவே, அறிவு ஆற்றல்களில் மிக்கவரென்று நம்மால் மதிக்கப்பெறும் தேவர்களாலும் அவன் பெருமையை அறிய வொண்ணாது என்பது கவிஞனின் குறிப்பு. ஆண்டவன் ஆயிரம் பெயருடைய அமலன் என்பதையே கருடன் வாய் மொழியாக,

பேரா யிரங்கள் உடையாய்

பிறந்த பொருள்தோறும் நிற்றி' என்று பேசுவன். 'நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான்' 'பேரும் ஒர் ஆயிரம் பிறபல உடைய எம் பெருமான்' 'பேராயிரம் உடைய பேராளன்' என்ற ஆழ்வார்களின் வாக்குகளை நினைவிற் கொண்டே இங்ஙனம் கவிஞன் பேசுவன்.

மந்திரங்களுள் சிறந்தது திருமந்திரம்; நாராயண நாமம். இராமநாமமும் இதுவேயாகும். இதன் பெருமை சொல்லுந்தரமன்று. இந்நாமம் அருகிலிருந்து தன்னைப்

62. அயோத். சித்திரகூட-1 63. யுத்த. நாகபாசம்-261 64. திருவாய். 5.9:11 65. திருவாய். 1.3:4 66. பெரி. திரு. 8.1:6