பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கம்பன் கண்ட மெய்ப்பொருள் 71

எழில்கொள் சோதிஎந்தை

தந்தை தந்தைக்கே' என்பதால் கைங்கரியத்துவமும் விளக்கப்பெறுகின்றன. சரணாகதித்வம் இராமன் வாய்மொழியாகவே,

'வெற்றியே பெறுக தோற்க வீகவீ யாது வாழ்க பற்றுத லன்றி யுண்டோ

அடைக்கலம் பகர்கின் றானை'

என்ற பாசுரப் பகுதியில் விளக்கம் பெறுகின்றது. இந்தக் கட்டத்தில் இராமனே பலவாறு இதற்கு விளக்கம் தருகின்றான். இறைவனுக்கு அடிமை செய்யவேண்டும் என்ற எண்ணமும், அங்ஙனம் மேற்கொள்ளும் செயலும் சுக்கிரீவன், வீடணன், அதுமன், சடாயு முதலிய பலரிடத்தும் காணப்பெறுகின்றன. ‘அடியாரின் ஏவல் செய்தி' என்ற அன்னையின் வாக்கின்படி ஏவல் கேட்டு நிற்கும் இலக்குவன் கைங்கரிய வடிவமாகின்றதைக் காவியம் எங்கும் காணலாம்.

இறுவாய் : ஒரு நூல் சிறப்புற்று விளங்குவதும் அந் நூலை யாத்த கவிஞன் பெரும்புகழுடன் திகழ்வதும் அந்நூல் யாத்தற்கு அவன் தேர்ந்தெடுக்கும் பொருளைப் பொறுத்துள்ளன. கம்பன் தேர்ந்தெடுத்த கதைப் பொருளோ மிகச்சிறந்தது. அது திருமாலின் அவதார மான "காசில் கொற்றத்து இராமன் கதை' ஆகும்.

71. திருவாய்-3.3:1 72. யுத்த. வீடணனடைக்-108 73. , , * 愛 109 to 1.0 74. அயோத் நகர் நீங்கு-132 73. கம்ப. தற்சிறப்புப் பாயிரம்-4