பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அறிவியல் தமிழ்

இயல்பாகவே இராமனைப் புகழ்தற்குரிய இடங்கள் பல. அவ்விடங்களில் எல்லாம் திருமாலைப் பரம்பொருளாகக் கொள்ளும்படி பலமுறை கூறியுள்ளான் கவிஞன். எனவே, கம்பனுக்கு உயிருக்கு உயிராசவும் உணர்வுக்கு உணர் வாகவும் ஒப்புயர்வற்றதாகவும் கொண்ட கடவுள் பரமபத நாதனே என்பது பெறப்படும். மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரானாகிய அவனே அவன் கண்ட மெய்ப் பொருள்; பிறவிக்கு முதற்காரணமாகவுள்ள அறியாமை (அவிச்சை) நீங்குதற்கும் வீடுபேற்றினைப் பெறுவதற்கும் முக்கியக் காரணமாயும், தூயதாயும், என்றும் ஒரே தன்மையதாயுமுன்ள அதுவே (அவனே) அவன் கண்ட செம்பொருள்; ஈசுவரன்.

'பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது ஆறிவு.'"

SAAAAAA AAAASASASS

76. குறள்-358

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/74&oldid=534093" இலிருந்து மீள்விக்கப்பட்டது