பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. திருப்பல்லாண்டு’

சைவ வைணவ சமய வளர்ப்புப் பண்ணைகளாகத் திகழச் செய்து வளர்த்த பெருமை முறையே தில்லைக்கு அருகிலுள்ள திருநாரை யூரையும் காட்டுமன்னார் கோயிலை யும் நினைக்கச் செய்கின்றன. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசனை புரிந்து வந்த ஆதி சைவ குடும்ய்த்தில் தோன்றிய நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியார் தேவாரப் பாவின் கருத்திலும் பண்ணிசையிலும் மனத்தைப் பறிகொடுத்த சோழப் பேரரசன் இராசராசனின் வேண்டுகோட்கிணங்கி மூவர் பாடியருளிய தேவாரப் பாக்களைத் தேடி எடுத்து அவற்றை ஏழு திருமுறைகளாக வகுத்ததும், பின்னர் வந்த சிவநெறிச் செல்வர்கள் திருவாசகத்தையும் திருக்கோவை யாரையும் எட்டாம் திருமுறையாகவும், திருமாளிகைத் தேவர் முதலாக ஒன்பது சைவப் பெரியார்கள் பாடிய திருவிசைப்பாப் பதிகங்களை ஒன்பதாந் திருமுறையாகவும், திருமூலர் திருமந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும், நம்பியாண்டார் நம்பியுட்படப் பன்னிரண்டு பெரியோர்கள் பாடியருளிய நூல்களைத் தொகுத்துப் பதினோராந் திரு முறையாகவும், சேக்கிழார் பெருமானால் பாடப்பெற்ற திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணத்தைப் பன்னிரண்டாந் திருமுறையாகவும் வகுத்தனர் என்பது சைவப் பெருமக்கள் நன்கு அறிந்த செய்தி. அங்ங்ணமே, குடமுக்குத் திருப்பதி எம்பெருமான்மீது “ஆராவமுதே' எனத் தொடங்கும் நம்மாழ்வாரின் திருவாய் மொழியில்

  • சிதம்பரம் திரு. R. கனகசபை பிள்ளை மணி விழா மலரில் (1973) வெளி வந்தது.

அ.த-5