பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#4 அறிவியல் தமிழ்

உள்ளத்தைப் பறிகொடுத்தவரும் காட்டு மன்னார் திருமால் கோயில் எம்பெருமானுக்குக் கைங்கரியம் புரிந்துவந்தவருமான நாதமுனிகள் என்ற திருமாலடி யாரின் முயற்சியால் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்’ என்னும் தமிழ்மறை தொகுக்கப்பெற்றது என்பதும் வைணவப் பெருமக்கள் நன்கு அறிந்ததாகும். இந்தப் பெரியார்கள் இருவரும் தொகுத்த தொகுப்பில்தான் "திருப்பல்லாண்டு என்ற தலைப்பில் இரண்டு பதிகங்கள் காணப்பெறுகின்றன. இரண்டு பதிகங்களும் அவ்வச் சமயக் கடவுனருக்கு வாழ்த்துக் கூறுவதாக அமைந் துள்ளன.

நெடுங்காலம் வாழ்க’ என வாழ்த்துதற் பொருளி லமைந்த இசைப்பாட்டு ‘பல்லாண்டிசை என வழங் கப்பெறும்.

"பாடுவார்பணி வார்பல்லாண்டிசை கூறுபத்தர்கள்

சித்தத் துள்புக்குத் தேடிக் கண்டுகொண்டேன்

திருவாரூர் அம்மானே" என்று நாவுக்கரசர் பெருமானின் தேவாரப் பாவால் அவர் காலத்துப் பல்லாண்டிசை பாடும் வழக்கமுண் டென்பதனை ஒருவாறு அறியலாம். எங்குமாய் எல்லா மாய் எப்பொழுதுமாய் இருக்கும் இறைவனைச் சில்வாழ் பல்பிணிச் சிற்றுயிர்களாகிய நாம் வாழ்த்து வது நம்முடைய வாழ்க்கை இன்பத்தை மிகுவிப்பதற் காகவே யாகும் என்பது வெளிப்படை. "வாழ்த்துவ தும் வானவர்கள் தாம்வாழ்வான்' என்ற மணிவாசகப் பெருமானின் திருவுளப் பாங்காலும் இதனை அறியலாம்.

2. அப்பர் தேவாரம் (கலமுறை): 4.20:10 3. திருவாச. திருச்சத-16