பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பல்லாண்டு 7;

எல்லாச் சமயத்தினரும் இறைவனை இங்ங்ணம் வாழ்த்துதல் பக்தி நிலையில் எழும் செயலாகும். பல்லாண்டு கூறும் பக்தர்கள் மனத்தில் எப்பொழுதும் இறைவன் நீங்காது எழுந்தருளியிருப்பான் என்பது எல்லாச் சமயத்தவர்களின் நம்பிக்கையுமாகும். இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க" என்று ஆளுடைய அடிகளின் அருளிச்செயலும் இதனை வற்புறுத்துவது காண்க. இனி மேற்குறிப்பிட்ட ஒரே யாப்பில் அமைந்த இரண்டு 'திருப்பல்லாண்டுகளையும் நோக்குவோம்.

ஒன்பதாம் திருமுறையின் இறுதிப் பதிகமாக அமைந்திருப்பது சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு' ஆகும். இது பதின்மூன்று திருப்பாடல்களைக் கொண்டது. தில்லை மூதுாரில் திருக்கோயில் கொண்டு ஆநந்தத் தாண்டவம் புரியும் நடராசப் பெருமான தம் அடியாராகிய சேந்தனாரின் அன்பின் திறத்தை உலகிற்குக் காட்ட வேண்டுமென்ற அருள்நோக்கத்துடன் மார்கழித் திருவா திரைத் திருவிழாவில் தாம் திருத்தேர் கொண்டருளும் போது மழைபெய்யுமாறு செய்து தம்முடைய தேரைச் சேற்றிலழுந்துமாறு திருவருள் பாலித்தார். அப்பொழுது "சேந்தா, தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக” என்றதொரு ஒலி எல்லோரும் கேட்கும்படி விண்ணில் ஒலித்தது. தேரிழுக் கும் அடியார் குழுவில் ஒருவராய் நின்ற சேந்தனார் "மண்ணுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்!" என்று தொடங்கும் திருப்பல்லாண்டு திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருத்தேரும் வடம் பிடிக்காமல் தானே அசைந்து ஒடி நிலையினை அடைந்தது. இவ்வற்புதத்தை கண்டார் அனைவரும் சேந்தனாரது பேரன்பின் திறத்தைப் பெரிதும் எண்ணி நெஞ்சம் நெக்குருகி நின்றனர். இதுவே இப்பதிகம் தோன்றிய வரலாறு.

4. திருவாச. சிவபுரா-அடி ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/77&oldid=534096" இலிருந்து மீள்விக்கப்பட்டது