பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ኧ அறிவியல் தமிழ்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலாயிரத்தில் முதற்பதிகமாக அமைந்திருப்பது பெரியாழ்வார் அருளிய "திருப்பல்லாண்டு. இது பன்னிரண்டு திருப்பாசுரங்களைக் கொண்ட ஒரு சிறு பிரபந்தமாகும். இதுவும் ஓர் அற்புத நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாக வரலாறு. அந்த வரலாறு இது. சீவல்லப்பதேவன் என்னும் பாண்டியன் புலவர்களைத் திரட்டிப் பரதத்துவத்தை அறுதியிட நினைத்தான். அங்கனம் அப் பரம்பொருள் இன்னதென உறுதியுடன் அறுதியிட்டுக் கூறுபவர்க்கு ஒரு பொற்கிழியைச் சன்மானமாக அளிப்பதாகப் பறையறை வித்து அக்கிழியை அவையின் நடுவில் தொங்கவிட்டான். நாட்டின் நாற்புறங்களினின்றும் புலமை மிக்கோர் வந்து இரண்டனர். சிவில்லிபுத்துார் எம்பெருமான் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் கனவில் தோன்றி மதுரை சென்று பாண்டியனது அரசவைக்கு ஏகிப் பரமபதநாதனாகிய நாராயணனே பரம்பொருள் என நிலைநிறுத்திப் பொற் கிழியை அறுத்து வருமாறு பணித்தார். அங்ங்னமே கமலைக்கேள்வனின் கருணையைக் கணக்க நம்பியிருந்த பெரியாழ்வாரும் புலவர்கள் நடுவில் நான்மறைகள் இதி காச புராணங்களிலிருந்து பல சான்றுகளை எடுத்துக் காட்டிச் சீமந் நாராயணனே பரம் பொருள் என்றும் அவனைச் சரணமடைவதே சிறந்த உபாயம் என்றும் நிலைநிறுத்தினார். அரசவையில் தொங்கிய பொற்கிழி யும் தானாகவே ஆழ்வார் முன்னிலையில் தாழ இழிய, அதுவும் எம்பெருகானின் கருணை என உவந்து ஆழ்வார் அதனை அறுத்துக் கொண்டருளினார்.

இந்த நிகழ்ச்சியை ஒரு பெரு விழாவாகக் கொண் டாட வேண்டுமென்று திருவுளங்கொண்ட அரசன் ஆழ்வாருக்குப் பட்டர் பிரான்' என்ற திருநாமம் வழங்கி அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர மெங்கும்