பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருப்பல்லாண்டு 77

உலா வரச் செய்தான். மகனுடைய திருவிழாவை மகிழ்ச்சியுடன் காணவரும் தாய் தந்தையர் போல் பரமபதநாதனும் பெரிய பிராட்டியுடன் பெரிய திருவடியின் மீது இவர்ந்த வண்ணம் விண்ணில் தோன்றி ஆழ்வாருக்குக் காட்சி தந்தருளினான். ஆழ்வாரும் சிறிதும் செருக்குக் கொள்ளாமல் எம்பெருமானின் அநந்த கல்யாண குணங்களுள் அழகு ம்ென்மை முதலிய திருக்குணங்களில் தம் மனத்தைப் பறிகொடுத்துப் பக்திப் பரவசராய்த் தம் நிலைமையையும் எம்பெருமானுடைய நிலைமையையும் மறந்து "காலம் நடையாடாத பரமபதத்தில் நிலை பெற்றிருக்கும் இப்பரம புருடன் காலம் நடையாடுகின்ற இந்த உலகில் வந்து நிற்கின்றானே, பாவிகளின் கண்னெச்சில் பட்டு இவனுக்கு என்ன தீங்கு வருமோ?" என்று அஞ்சினார். அந்தத் திவ்விய மங்களத் திருமேனிக்கு எவ்விதமான தீங்கும் நேரிடாதிருக்கவேண்டும் என்று மங்களா சாசனம் செய்கின்றவராய் யானைமணிகளையே கைத்தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டு என்ற திருப் பதிகத்தைப் பாடியருளினார்.

இங்ங்ணம் சைவ வைணவர்கள் தத்தம் பரம்பொரு ளாகக் கருதும் இறைவனுடைய கருணையின் அடிப்ப.ை யாகத் தோன்றிய இவ்விரண்டு பதிகங்களின் சில ஒற்றுமை களை ஈண்டுக் காண்போம். வாழ்க்கையின் திறனாய்வே இலக்கியம் என்றும், வாழ்வினின்றே இலக்கியம் மலர் கின்றது என்றும் திறனாய்வாளர்கள் கூறுவதை நாம் அறிவோம். பிற்காலத் தமிழர்களின் வாழ்வில் சமயம் உயிர் நாடியாக அமைந்திருந்தது என்று நாம் அறியக்கிடப்ப தால் அவர்களிடையே தோன்றிய இலக்கியங்களிலும் சமயக் கருத்துகள் பிரதிபலிப்பதைக் காண்லாம். و به ق) به چه வைதிக சமயங்களாகிய சைவம், வைணவம் இவற்றின் அடிப்படையில் எழுந்த:இந்த இரண்டு திருப்பல்லாண்டு