பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ył

அறிவியல்ைப் பற்றியன. பன் ைகூ க் தமிழர்களின் அறிவியலை ஆராய்ந்து இவ்விரண்டும் இனிது விளக்குவன. ஏழும் ஒன்பதும் பத்தும் வைணவ நெறி நின்று, சைவ நெறி அளாவி, உலக வாழ்க்கையின் இறுதியில் பெற வேண்டிய வீட்டின்பத்தை இனிதே புகல்வன.

கட்டுரைகள் பத்தும் ஆழ்வார்களின் பாசு.சங்களில் ஆசிரியர் எந்த அளவிற்கு ஆழ்ந்துள்ளார் என்பதையும், "கம்பனில் நெஞ்சைப் பறிகொடுத்த காட்சியையும், அறிவியலில் துறையோகிய நெஞ்சத்தையும் காட்டுகின்றன.

ஆழ்வார்களின் பாடல்களில் ஆசிரியர் ஆழங்கால் படுவது போலவே அவருடைய கட்டுரைகளில் நாமும் ஆழங்கால்படுகிறோம்.

ஆசிரியரின் இந்த அரிய முயற்சியைத் தமிழ் கூறும் தல்லுலகம் நன்கு வரவேற்குமாக, இவருடைய நூற்றாண்டு விழாவின்போது இத்தகையதொரு நூலைத் தொகுத்து இவர் கையில் தந்து மகிழும் பேறு மாணாக்கனாகிய எனக்குக் கிட்ட வேண்டுமென்ற விழைவுடன் என் ஆசிரியப் பெருமகனார் பன்னெடுங்காலம் பயன் பெருக்கி வாழ வேண்டுமென உளமார வாழ்த்துகின்றேன்.

சு செல்லப்பன்