பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#8 அறிவியல் தமிழ்

களிலும் சில பொதுமையான கருத்துகள் மிளிர்வதில் வியப் பொன்றும் இல்லை.

சேந்தனார், பொன்னம்பலத்து ஆடல்வல்லானின் பேரருளால் சேற்றில் அழுந்தியிருக்கும் தேர் திருக் கோயிலை வலம் வத்து நிலையினை அடைய வேண்டும் என்று கோருகின்றார். இவரது பதிகம் பலனை எதிர் நோக்கிப் பாடியருளிய பாடல்களடங்கியது. எம் பெரு மான் திருங்களால் தான் பரதத்துவத்தை நிலைநாட்டிய தும், தன்னையும் ஒரு பொருளாகக் கருதித் தனக்குப் பெரிய பிராட்டியருடன் சேவை பாலித்ததுமான பலனை எய்திய பிறகு விஷ்ணு சித்தர் பாடியருளியது அவரது திருப்பதிகம். முன்னதில் எம்பெருமானின் திருவருள் விண்ணுலக ஒகரீரியாக வடிவு கொண்டது. பின்னதில் எம்பெருமானின் திருவருள் அவருடைய திவ்வியமங்களத் திருமேனியுடன் காட்சி அளித்தது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அடியார்க் கெளியன் என்பது இரு சமகத்தார்க்கும் பொதுவான கருத்து.

'ஆன்ன நடை மடவாள் உமைகோன்

அடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த

பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே" என்று பாடி மகிழ்வர் சேந்தனார். அங்ஙனமே விஷ்ணு சித்தரும்,

"அடியோ மோடும் நின்னோடும்

பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு' என்று பாடிக் களிப்பர். இரண்டிலும் ‘அடியோமுக்கு என்ற சொல் தம்மையும் தம்முடனிருக்கும் அடியார்களை யும் கறித்த நிற்கின்றது.

5. சேந்தனார்.1 .ே விஷ்ணு சித்தர்..!