பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருப்பல்லாண்டு 79

அப்பனை தினைந்து போற்றும் இரண்டு அடியார்களும் அன்னையையும் சேர்த்தே நினைவு கொள்ளுகின்றனர். 'தடித்தவோர் மகனைத் தந்தையிண்டடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் தந்தை யணைப்பன் என்ற உலகநெறி இரண்டிலும் நிழலிடுகின்றது. அன்ன நடை மடவாள் உமைகோன்’ என்ற சொற்றொடரில் சேந்தனார் அன்னையை நினைந்து போற்றுதல் காண்க.

'வடிவாய் நின்வல மார்பினில் - வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு'

என்று பட்டர் பிரானும் புருஷகார பூதையான" பெரிய பிராட்டியாரையும் மறவாது போற்றுதலைக் காணலாம்

இரு சமயத்தினரும் தத்தம் முழுமுதற் கடவுளரைப் பிறப்பு, இறப்பு அற்ற பெருமான் என்று போற்றினும்: ஊர்திரை நீர் வேலி உலகத்திலுள்ள சைவர்கள் மன்னிய நாள்மீன் மதி கனலி என்றிவற்றை முன்னம் படைத்த முதல் வனாகிய சிவபெருமானை ஆதிரையான், ஆதிரையான்' என்று கூறி மயங்குவர். அங்ங்ணமே, கர்மம் அடியாகப் பிறப்பு அற்றவனும் தன்விருப்பங் காரணமாகப் பண்பிறவிப் பெருமானாகிய நாராயணனைத் 'திருவோணத்தான்" என்று வழங்குவர் வைணவப் பெருமக்கள். முன்னவர் சிவ பெருமான் பிறந்த ஆதிரை நட்சத்திரத்தைப் போற்றும் முறையில்திருவாதிரைத்திருநாளாகவும், பின்னவர் திருமால் பிறந்த திருவோண நட்சத்திரத்தைப் போற்றும் முறையில் திருவோணத் திருவிழாவாகவும் கொண்டாடுகின்றனர். வழிவழியாக வரும் இந்த மரபினை தினைந்தே சேந்தனார் *அணியுடை ஆதிரை நாள்" என்று மார்சழித் திருவா திரைத் திருநாளைக் குறிப்பிடுவர். பெரியாழ்

விஷ்ணு சிததர்-;

7 8. புருஷ்காரபூதை-பரிந்துரை கறுபவள். 9. சேத்தனார்.12