பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 அறிவியல் தமிழ்

வாரும் திருவோணத் திருவிழா' என்று நினைவுடன் போற்றியுரைப்பர்.

இரண்டு சமயத்தினரும் தத்தம் கடவுளரின் வீரச்செயல் களையும் வெற்றிச் செயல்களையும் பிறவற்றையும் புகழ்ந்த வண்ணம் இறையநுபவம் பெறுவர். சிவபெருமான் சன காதி முனிவருக்குக் கல்லா லின் கீழிருந்து அறமுறைத்த நிகழ்ச்சியை ஆழநிழற் பட்டன்' என்றும், மேரு மலையை வில்லாகக் கொண்டு திரிபுரம் எரித்த வரலாற்றைக் குறிப் பிடும் முறையில் வில்லாண்ட கனகத்திரள் மேருவிடங் கன்" என்றும், வியாக்கிரக பாத முனிவரின் குழந்தையான உபமன்யுவிற்குப் காற்கடலை ஈந்தது, திருமாலுக்குச் சக்கரம் ஈந்தது ஆகிய வரலாறுகளைக் குறிப்பிடும் முறையில்,

"பாலுக்குப் பாலகன் வேண்டி

அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்(று).அருள் - செய்தவன்’**

என்றும், மணலால் ஆன சிவலிங்கத்திற்கு ஆவின் பாலால் திருமஞ்சனம் ஆட்டிய செயலைக் குலைத்த எச்சதத்தன் என்ற தன் தந்தையின் கால்களை வெட்டிய விசார சருமர் என்பவருக்கு அவரது பச்தியைப் பாராட்டித் தொண்டர் கட்கெல்லாம் அதிபதியுமாக்கிச் சண்டிசப் பதமும் அளித்த வரலாற்றைப் புலப்படுத்தும் முறையில்,

"தாதையைத் தாளற வீசிய

சண்டிக்கிவ் அண்டத்தொடு முடனே பூதலத் தோடும் வணங்கப்பொற்

கோயிலும் போனகமும் அருளிச் 10. பெரியாழ்வார்.8 11. சேந்தனார்.3 12. சேக்தனார்.: 13. சேந்தனார்.9