பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 அறிவியல் தமிழ்

பெற்ற சங்கு சக்கரங்களின் பொறிகளைத் தம்முடைய திருப்புயங்களில் அணிந்துகொண்டு இருப்பவர்கள். இதனைப் பெரியாழ்வார்,

"தீயிற் பொலிகின்ற செஞ்சுடர்

ஆழிதிகழ் திருச்சக்க ரத்தின்

கோயிற் பொறியாலே யொற்றுண்டு

நின்று குடிகுடியாட் செய்கின்றோம்"

(தீயின்-நெருப்பின் சுடரைவிட, பொலிகின்ற-பிரகாசிக் கும்; ஆழி-வட்டவடிவான, கோயில்-இடம்; பொறி-அடை யாளம்; ஒற்றுண்டு. அடையாளம் செய்யப்பட்டு; குடிகுடி

வழிவழி) என்று குறிப்பிடுவர்.

இரண்டு அடியார்களும் அடியார் கூட்டம் திரளுமாறு கூவியழைத்து இறைவனுக்குப் பல்லாண்டு கூறுமாறு பணிப்பாதை அவரவர்தம் பாசுரங்கள்தோறும் காணலாம். சான்றாக,

'ஊரும் உலகுங் கழற

உழறி உமைமண வாளனுக்காட்

பாரும் விசும்பும் அறியும்

பரிசு,நாம் பல்லாண்டு கூறுதுமே"

(சமுற உழறி.புகழ்ந்து பேசி: ஆன்-அடிமைத்தன்மை; அறியும் பரிசு-அறியும் வகை) என்று சேந்தனாரும்,

'நாடு நகரமும் நன்கறிய

நமோநாரா யணாய வென்று

25. பெரியாழ்வார்-7 26 சேந்தனார்-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/86&oldid=534105" இலிருந்து மீள்விக்கப்பட்டது