பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$Ꮬ அறிவியல் தமிழ்

என்றும் போற்றிப் புகழ்வt. பெரியாழ்வாரும் வைண வர்கள் முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ள பரமபத தாதனாகிய நாராயணனைப் 'பையுடைய நாகப் பகைக் கொடியான்' என்றும், "படுத்த பைந்நாகனைப் பள்ளி கொண்டான்' என்றும், பரமேட்டி, பரமாத்மன் '*' என்றும் அடையாளம் காட்டி மகிழ்வர். அன்றியும், "மல்லாண்ட திண்டோள் மணிவண்ணன்' என்றும் "இலங்கை பாழாகப் படைபொருதான்' என்றும், "அந்தியம் போதில் அரியுருவாகி அளியை அழித்தவன்”* என்றும், 'ஆழிவல்லான்' என்றும், 'பல்வகையாலும் பவித்திரன்' என்றும் போற்றி உரைப்பர்

இதுகாறும் கூறியவற்றால் இரண்டு திருப்பதிகங் களிலும் உள்ள கருத்தொற்றுமைகளை ஒருவாறு கண் டோம், சைவ வைணவ சமயங்கள் இரண்டும் வைதி கச் சமயங்களாகும்; ஒரு தாய் வயிற்றில் தோன்றிய சகோதரர்களைப் போன்றவை. சில குடும்பங்களில் சகோதரர்களிடையே தோன்றும் போட்டி பொறாமை காழ்ப்பு முதலியவற்றைப் போலவே இவைகளிடையே அவை சிலசமயம் தோன்றி மறைகின்றன. பக்தி இயக்கக் காலத்தில் புறச் சமயங்களாகிய பெளத்தம், சமணம் போன்ற சமயங்களை எதிர்ப்பதில் இவை இரண்டும் ஒன்றுபட்டு சின்றுள்ளன. திருமுறைத் திருப்பாடல்களிலும் திவ்வியப் பிரபந்த திருப்பாசுரங்களிலும் சில இடங்களில் புறச்சமயக் கண்டனங்களைக் காணலாம். ஈண்டுக் குறிப்பிட்ட இரு பதிகங்களும் ஆண்டவனை வழுத்துவதில், அவனுக்குப் பல்லாண்டு பாடிப் பரப்புவதில், ஒத்த பண்புகளைக் கொண்டவை என்பதனை நன்கு அறி கின்றோம். -

37. பெரியாழ்வார்.8 41. பெரியாழ்வார்-3 38. பெரியாழ்வார்.9 42. பெரியாழ்வார்-5 39. பெரியாழ்வார்.12 43. பெரியாழ்வார்-7 40. பெரியாழ்வார்.1 44. பெரியாழ்வார்.8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/88&oldid=534107" இலிருந்து மீள்விக்கப்பட்டது