பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


స్త్రీ அறிவியல் தமிழ்

"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே-அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவும் கூடுவ தில்லை-அவை

சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை; மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த

மேற்கு மொழிகள் புவியிசை யோங்கும்’ என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!

இந்த வசை யெனக் கெய்திட லாமோ? சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்த்திங்குச்

சேர்ப்போம் '

இத்தகைய ஊக்குமொழிகளாலும் அறிஞர்கள் பலர் ஆற்றிவரும் தொண்டுகளாலும் கடந்த சில ஆண்டு களாக அறிவியல் தமிழ் புதிய வேகத்துடன் வளர்ந்து வருகின்றது. ஆயினும், மேலை நாடுகளில் அறிவியல் துறை பல்கிப் பெருகி வரும் வேகத்திற்கு ஏற்ப அது வளர்ச்சி பெறவில்லை என்பதுவே இன்றுள்ள நிலையாகும், கடந்த சுமார் இருநூறு ஆண்டுகளாக நம்நாடு வேற்றுமொழியாளரின் ஆட்சியிலிருந்து வந்தது. இதன் காரணமாக அடிமட்டத்திலிருந்து எல்லா மாவட்டங் களிலுமே ஆங்கிலம் பயிற்று மொழியாக அமைந்தது. நாடெங்கும் எல்லா மாநிலங்களிலும் இது வரன் முறையாக நடைபெற வேண்டியது இயல்பாயிற்று. மேலை நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரண மாக வளர்ந்த அறிவியல் துறைகள், சமூகவியல்பற்றிய துறைகள், பிற துறைகள் ஆகியவற்றை ஆங்கிலத்தின்

1. பாரதியார் கவிதைகள்-தமிழ்த்தாய்-8,9,10.11