பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


HÙ அறிவியல் தமிழ்

சல்வித் திட்டத்திற்குமேல், சற்று உயர்ந்த நிலையில், பொதுமக்கள் படிப்பதற்கென்று பல நூல்கள் தோன்ற லாயின. இராஜாஜி அவர்கள் எழுதிய 'தமிழில் முடியுமா?, 'திண்ணை இரசாயனம்’ ஆகிய நூல்களும்; திரு. பெ. ந. அப்புசாமி அவர்கள் எழுதிய மின்சாரம்", "வானக்காட்சி போன்ற முதல் நூல்களும்; நீங்களும்-விஞ்ஞானமும்’ போன்ற மொழி பெயர்ப்பு நூல்சளும்; பேராசிரியர் ஆர். கே. விசுவநாதன் அவர்கள் எழுதிய 'அணுவில் ஆநந்தத் தாண்டவம்', 'விசுவரூபம்', 'ஆலயமணி போன்ற நூல் களும்; பேராசிரியை ஈ. தா. இராஜேசுவரி அம்மையார் எழுதிய சூரியன்', "வானக்குமிழ் போன்ற நூல்களும் குறிப்பிடத் தக்கவை. இத் துறையில் இங்ங்ணம் பணியாற்றிய வேறு பல ஆசிரியர்களும் உள்ளனர், சரியான விவரங்கள் தெரியாததால் அவர்களுடைய பெயர்சளும் குறிப்பிடப்பெறவில்லை. இவர்கள் யாவரை யும் இத் துறையின் முதல் நிலைத் தொண்டர்களாகக் சருதலாம். அரசின் துணையோ பிறர் துணையோ இன்றித் தாமாகவே தாய்மொழிப் பற்றுடன் தொண்டாற்றிய பெரியார்கள் இவர்கள்.

கலைச் சொல்லாக்க முயற்சிகள் : அறிவியல் தமிழ் வரலாற்றில் தமிழக அரசின் பங்கும் உண்டு, தொடக்கத்தில் இது குறைவாகவே இருந்தது. நாள டைவில் இது வளர்ந்து வருகின்றது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் இராஜாஜி அவர்கள் சென்னை மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் உயர்நிலைப்பள்ளி மட்டத்தில் தாய்மொழிக் கல்வி நடை முறைக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக இம் மட்டத்தில் தனியார் முயற்சியால் பல்வேறு துறையில் பல நூல்கள் தோன்றின. அறிவியல் திமிழின் வளர்ச்சியில் பெரிய இடர்ப்பாடாக இருப்பது கலைச் சொற்களின்