பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அறிவியல் தமிழ் ツ」

ஆக்கமே. இதில் பல்வேறு கருத்து வேற்றுமைகள் உள்ளன. இவற்றை இச் சிறு கட்டுரையில் ஆராய்வதற்கு இடம் இல்லை. கலைச் சொற்களினை ஆக்கும் தீர்மானம் சென்னை மாகாணத் தமிழர் முதலாண்டு மாநாட்டில் (சூன் 10, 11-1934) தோன்றியது. அதனை நிறைவேற்ற ஒர் உட்கழகம் அப்பொழுதே உருப்பெற்றது. அம் மாநாட்டில் தோன்றிய சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் அவ்வுட்கழகத்தைக் கூட்டிச் (14-10.1934) சொல் லாக்கக் கழகம் எனப் பெயர் தந்து வேலை தொடங்கியது. அதனால் உருப்பெற்ற பல்வேறு துறைச் சொற்கள் பல்வேறு அறிஞர்களால் திருத்தம் செய்யப் பெற்று செப்பம் அடைந்தன். கணிதவியல், இயற்பியல், வேதியியல் போன்ற ஒன்பது துறைகளில் கலைச் சொற்கள் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க ஆதரவில் (1938) வெளி வந்தன. இதில் சென்னை மாகாண முதல் அமைச்சராக இருந்த இராஜாஜி அவர்கள் தந்த ஆக்கமும் ஊக்கமும் குறிப்பிடத்தக்கவை, இந்த முயற்சிகள் பல நல்ல கலைச் சொற்களை உருவாக்கியுள்ளன. நல்ல பல தனித்தமிழ்ச் சொற்சளும் தோன்றின. இச் சொற்கள் சுமார் பத்து ஆண்டுக் காலம் நூல்கள் எழுதுவோருக்குப் பெருந்துணை யாக இருந்தன.

நாடு விடுதலை பெற்றுச் சுயாட்சி ஏற்பட்ட பிறகு இத் துறை வளர்ச்சியில் ஒரு தனி வேகம் உண்டாயிற்று. தமிழ்க் காதலர் திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள் சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இந்த வேகத்தை மேலும் முடுக்கினார். இவர்கள் காலத் தில் மீண்டும் பல்வேறு துறைகட்கும் தனிக் குழுக்கள் அமைக்கப்பெற்றன. இவைகளின் துணையால் இதுகாறும் தனியார் முயற்சியால் தோன்றிய பல்வேறு கலைச் சொற் களும் நூல்கள் எழுதுவோர் தத்தம் நூல்களில் இறுதியில் பிற சேர்க்கைகளாகத் தொகுத்து வெளியிட்ட சொற்களும்