பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 அறிவியல் தமிழ்

கல்வித்துறை இயக்குநராக இருந்த தாமரைச் செல்வர் தெ. து. சுந்தரவடிவேலு அ வ ர் வரி ன் தலைமையில் அமைக்கப் பெற்றது. சுமார் ஐயாயிரம் கலைச் சொற் களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கேற்ற தமிழ்ச் சொற் களையும் தொகுத்துக் கலைச் சொல்லாக்க அடிப்படை வேலையைச் செய்தது. பிறகு இச்சொற்களைப் பல்வேறு மட்டங்களில் ஆய்ந்து ஒருநிலையாக்கி நூல் வடிவில் (1959) வெளியிட்டது. உள்ளது சிறத்தலின் மூலமே முன்னேற்றம் காணமுடியும் என்ற முறைப்படி இச் சொற்கள் நடை முறையில் திருத்தங்கள் பெற்று புதுமெருகேறி வருகின்றன. துல்களை வெளியிடும் முயற்சிகள்: பல்லாண்டு களாகத் தனிப்பட்டோர் இத் துறையில் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளனர்; வெளியிட்டும் வருகின்றனர். இன்று வெளிவந்துள்ள, வெளிவந்து கொண்டிருக்கும் அறிவியல் நூல்களை, பாடநூல்கள், பொதுமக்களுக்கான நூலகள் என இரண்டு கூறுகளாகப் பகுத்துக் கூறலாம். இந்த இரண்டு பகுதிகளிலும் முதல் நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் என்ற இரண்டு வகை உள்ளன. தொடக்கத்தில் அவசரத்தின் நிமித்தம் மொழிபெயர்ப்பு நூல்கட்கு இடம் இருப்பினும், தெளிவு காரணமாகவும் மூலநூல் போலவே தோன்றுமாறு மொழி பெயர்ப்புச் செய்தல் அருமை காரணமாகவும், நாளடைவில் பல வேற்றுமொழி நூல்களை ஒப்பு நோக்கித் தமிழில் தெளி வுடன் மூல நூல்களாகவே வெளியிடும் முயற்சியில்தான் அதிகக் கவனம செலுத்தப் பெறுதல்வேண்டும்.

தனியார் துறையில் மேற்கொள்ளப் பெற்ற முயற்சி யால் பல்வேறு வகை அறிவியல் நூல்கள் வெளிவந்துள்ளன. பல்கலைக் கழகங்களும் அரசும் மேற்கொண்ட முயற்சியா ஆம் பல பாட நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் மொழி பெயர்ப்பு நூல்களும் உள்ளன; முதல் நூல்களும்