பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அறிவியல் திருவள்ளுவம்


          "துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
          இன்பம் பயக்கும் வினை” (669)

என்னும் குறட்பா

          "இன்பம் பயக்கும் வினை செய்க;
          துன்பம் உறவரினும் செய்க;
          துணிவு ஆற்றிச் செய்க--"

என அறிவிக்கின்றது.

இக்குறளில் எடுத்துக் கொள்ளப்பட்டது இன்பம். அதனைத் துணிவு ஆற்றி என்றது, நெஞ்சத்துணிவைத் துண்டுவதாகிய ஊக்கத்தைக் குறிக்கும். .ெ ந ஞ் ச த் துணிவால் எழுந்த ஊக்கத்துடன் செய்க என்றது, இன்ப ஊக்கத்தில் கிளர்ச்சியால் நேர்வது. எனவே, வள்ளுவர் குறள், உளவியல் வல்லுநர் அடிநிலை விளக்கத்தைப் பின் வருமாறு குறித்துக் காட்டுவதாகிறது.

          வள்ளுவர் : வல்லுநர் :
          இன்பம் பயக்கும்  : இன்ப
          துணிவு ஆற்றி  : ஊக்க
          செய்க  : கிளர்ச்சி

இது போன்றே வல்லுநர் காட்டிய 'துன்ப ஊக்க அமைதி'யை வள்ளுவக் குறள்

          "இன்பம் விழையான், இடும்பை இயல்பென்பான்
          துன்பம் துடைத்துான்றும் தூண்" (628)

என்பது காட்டியது. இக்குறளில் துன்பத்தைப் போக்கும் உறுதிப்பாடு கூறப்பட்டது.