கோவை. இளஞ்சேரன்
105
இவ்வுளப்பகுப்பியலில் 'அடக்கல்' ஒருதுறை.
"ஐந்தடக்கல ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து"
என்றதில்.
‘ஒரு பருவத்தில் அஃதாவது குழந்தைப் பருவத்தில்
இயல்பான 'அடக்கல்' அமையும். குழந்தையால்
இவ்வடக்கல் அறியப்படாதது. இவ்வடக்கலே முதுமை
வரை ஏழு பருவத்திற்கும் ஆளுமையாக நிற்கும். ஏழா
வது பருவம் வரை இந்த ஆளுமை ஏமாப்பு ஆகும்’
இவ்வாறு பொருள் பொதிந்த இக்குறளால் அக்காலத்
திருவள்ளுவரின் இக்கால உளப்பகுப்பியல் அடக்கல்’
புலனாகின்றது. எனவே திருவள்ளுவ உளப்பகுப்பியலாம்
'அடக்கல்' ஏலம் ஆகிறது.
அடக்கம் கல்வியாளர்க்கு அமைந்தால் கல்விக்குச் சிறப்பு என்பதை,
"கற்று அடக்கல் ஆற்றுவான்" (139) என்பதால் காட்டினார். இவ்வாறு காட்டிய தொடர்பாலும் மேலே கண்ட 'அடக்கல்' பற்றிய ஒருமை எழுமை என்னும் தொடர்பாலும் அடுத்துக் கல்வி ஏமத்தைக் காண நேர்கின்றது.
இடையில் ஒருமை, எழுமை பற்றிய ஒரு குறிப்பு. உரையாசிரியர்கள் ஒரு பிறப்பு, ஏழு பிறப்பு என்று பல இடங்களில் பொருள் கொண்டனர். ஏழு பிறப்பு திருவள்ளுவர் ஏற்றதே, ஏழு ஆயினும் அடக்கம், கல்வி பற்றிய கருத்தில் ஒரு (முதல்) பருவம், ஏழு (இறுதி) பருவம் என்று கொள்வதே அறிவார்ந்த பொருளாகும்.