இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்
திருவள்ளுவப் பெருந்தகைக்குக் கவிஞர்' என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் ஆகிறான்.
திருவள்ளுவர் கவிஞரா ?
திருவள்ளுவரைப் ‘புலவர் திருவள்ளுவர்’, ‘மன்புலவன்’ திருவள்ளுவன்', ‘முதற் பாவலர்’- எனப் புலவராகவும், பாவலராகவும் ‘மாலை’[1] சூட்டிப் போற்றினர். மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ‘பொய்யில் புலவன்’[2] என்றார். முந்தையோர் ‘கவிஞர்’ என்று பாடவில்லை.