பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அறிவியல் திருவள்ளுவம்

குழந்தையின் அறிதிறனை ஆய்ந்தவர் கலிபோர்னியா நாட்டுப் பேராசிரியர் பினே (Binet) என்பவர். இவர்,

'குழந்தைப் பருவத்தில் உள்ள அறிதிறன் செப்பமாக்கப் பெற்றால் அது அவன் வாழ்நாள் வரை அவனைப் பாதுகாக்கும்' என்று கண்டறிந்தார்.

மற்றொரு பேராசிரியர் டெர்மென் (Dermen) என்பார் தம் ஆய்வில்,

'குழந்தைகள் வளர்ந்த பின்னர், தாம் குழந்தைப் பருவத்தில் பெற்ற அறிதிறனால் உலகப்புகழ் அடைவர்' என்று கண்டறிந்தார்.

இக்காலத்தில் கண்டறியப்பட்ட கல்வி அறிவியல் (Educational Science) 305;&##6ir 505a, sirgjaft.8% மிசு எளிமையாக எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்னும் தொடரில் பொதிந்துள்ளது.

மேற்கண்டவற்றால் கல்வி ஒரு ஏமம் ஆகிறது.

கல்வி ஒரு ஏமத் தொடர்பில்

கல்வியறிவுடையார் அதன் வலிமையால் பல வகையில் ஏமம் ஆவார். அவற்றுள் ஒன்று அவரை நட்பாக கேண்மையாகக் கொள்ளல். இதனை,

"மூத்த அறிவுடையார் கேண்மை" (441) என்றார். இவ்வகைக் கல்வி ஏமத்தொடர்பில் 'கேண்மை ஏமம்' தொடர்கின்றது.