கோவை. இளஞ்சேரன்
11
இலக்கணம் வழுவாது எழுதினர். அவர்தம் செய்யுள்களும் பாக்களும் பாட்டும் 'பாரதியார்கவிதைகள்', 'பாரதிதாசன் கவிதைகள்’ எனக் கவிதைப்பெயரில் வழங்கப்படுகின்றன.
பொதுவான ஒரு கருத்து, 'செய்யுளைப் பாடுபவன் புலவன்; கவிதை எழுதுபவன் கவிஞன் என்பது. இதற்கு மாற்றாக ஓர் அமைதி சொல்வதுபோன்று திருஞானசம்பந்தர் "உரவார் கலையின் கவிதைப் புலவர்"[1] என்று "கவிதைப் புலவர்" என்னும் தொடரை வழங்கினார்.
ஒரு கருத்திற்குப் பழமைச்சொல்லும் இருக்கும். புதுமையாகச் சொல்லாக்கமும் அமையும். இவ்விரண்டையும் சங்க இலக்கியங்களிற் காணலாம்.
கவிதை - சங்கச்சொல்
'செய்யுள், பா, பாட்டு’ என்னும் பழமைச் சொற்களை தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காண்கிறோம். சொல்லாக்கமான 'கவிதை' என்னும் சொல்லை முதன்முதலில் பரிபாடல் காட்டுகிறது.வையை ஆற்றைப் பாடிய ஆசிரியர் நல்லந்துவனார் என்பார்,
"புலவர் புல
நாவிற் புனைந்த நன்கவிதை"[2]
என்று பாடினார். இதிலுள்ள ‘கவிதை' என்னும் சொல் அக்காலப் புதுமைப் படைப்புச் சொல். புலவர் புலமையால் பாடும் செய்யுளுக்குத்தான் 'கவிதை' என்னும் சொல்லை ஆக்குவதாக ஆசிரியர் நல்லந்துவனார் "புலவர்,