பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவை . இளஞ்சேரன்

15


செய்யுளையும் கவிதையையும் ஈடுகட்டிப் பார்க்க வேண்டும்.


மயிலின் கால் அடிக்கும் நொச்சி இலைக்கும் மாற்றி மாற்றி உவமைகளை இரண்டு இலக்கியங்களில் காண முடிகிறது.


"மயிலடி இலைய மாக்குரல் நொச்சி"

இது குறுந்தொகை என்னும் சங்க இலக்கியச் செய்யுள்.

"நொச்சிப் பாசிலை அன்ன பைக்தாள் மஞ்சை"/center>

இது திருவிளையாடற் புராணச் செய்யுள்.

'நொச்சி இலைபோல் மயிலின் கால்’ இது நம் காலத்துக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதை.

முன்னர் செய்யுளாகக் காணப்படுபவற்றுள் உள்ள உவமைக் கருத்தே இங்குக் கவிதை எனப்படுகிறது. இவ் உவமையைப் பாடியதைக் கருதியும் கவிஞர் சுரதா "உவமைக் கவிஞர்' என்று பாராட்டப்பட்டார்.

மற்றொன்று: குளத்து நீரில் செக்கச் சிவந்த ஆம்பல் பூத்ததை முத்தொள்ளாயிர வெண்பாச் செய்யுள்,


"வெள்ளம் தீப்பட்டது” என்கின்றது. இக்காலப் புதுக்கவிதை ஒன்று முத்தொள்ளாயிரத் தொடரை வட மொழியில் மொழி பெயர்த்தது போன்று,

________________

1. கொல்லன்அழிசி: குறுந்தொகை - 138 - 3. 2. பரஞ்சோதி முனிவர் : திருவிளை - இந்திரன் பழிதீர்த்த படலம் - 74 - 1.