பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவை. இளஞ்சேரன்

23

கொடுத்தல்” என்பது முன் கண்ட பட்டிமண்டபக் கருத்துப் போரைக் குறிக்கும்; தருக்கத்தைக் குறிக்கும். இது கருதியே உரையாசிரியர் பரிமேலழகரும் இப்பொருளே கொண்டார்.

‘அளவு’ என்னும் சொல் பொதுவில் எண்ணிக்கை முதலிய பல அளவுகளைக் குறிக்கும். ஆற்றின் அளவு அறிந்து ஈக' (477) என்பதில் இப்பொதுப்பொருள் உள்ளது.

மேலே கண்ட குறள் கற்க' என்றதாலும், அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு’ என்றதாலும் கற்பதற்கும், மாற்றம் கொடுத்தற்கும் அளவை நூல்' என்பதே பொருந்துவது. பொதுவான அளவுப் பொருள் இங்கு பொருந்தாது. ஏனெனில் கல்வி கரையில’. கல்வி எண்ணிக்கை அளவில் அடங்காதது. ஆனால், எவற்றைக் கற்க வேண்டும் என்னும் அளவிற்கு உரியது. திருவள்ளுவர் 'கசடறக் கற்பவை கற்க’ என்று ஒர் அளவு கூறினார். எனவே, அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு அளவை நூலைக் கற்க வேண்டும்’ என்பதே பொருத்த மானது.

அளவை-விளக்கம்

இந்த ‘அளவை’ என்பது காண்டல் அளவை, கருதல் அளவை என்னும் இரண்டு படிகளைக் கொண்டது என்று கண்டோம். இவற்றுள் காண்டல் கண்ணால் காண்டலை யும், கருத்தால் காண்டலையும் குறிக்கும். கருதல்' என்பது கண்டதைக் கொண்டு அதன் தொடர்பில் உள்ளதைக் கருதி அளத்தலாகும். புகை வருவதைக் கண்டுகொண்டு நெருப்பு இருக்கும்’ என்பது போன்று கருதி அறிதல் - ஊகித்தல் ‘கருதல் அளவை’யாகும்.