பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

25

இவற்றிலுள்ள செயற்பாடுகளைக் கூர்ந்து பார்த்தால் காணல், கருதல் இரண்டுந்தாம் நிலைக்களமான செயற் பாடுகள். மற்றவை இவையிரண்டிற்கும் துணை செய்த பவை. இன்றியமையா நிலைக்களமான காவல். கருதல் இரண்டும் தமிழ் அளவையியலின் இரண்டு படிகள். திருவள்ளுவர் இவற்றின் அடக்கமாக "அளவறிந்து' என்று ‘அளவை நூ’லைக் குறித்தமை இங்கு நினைவு கூரத் தக்கது.

அறிவியற் பாகுபாடுகள்

மேலே விளக்கம் கூறப்பட்ட அறிவியல் இக்கால அறிவியல் வளர்ச்சியில் இரண்டு பாகுபாடுகளாகக் கொள்ளப்படுகிறது.

ஒன்று “பட்டறிவு அறிவியல்” (Exprimental Science)
இரண்டு, “முறை அறிவியல்” (Methodological Science)

 

பட்டறிவு அறிவியல்-.அறிவியல் அறிஞர் தாம் தம்,
பட்டறிவில் காணும் நிகழ்ச்சிகளையும்
அவற்றை வைத்துத் தாம் கருதல் (ஊகம்).
களையும் கொண்டு ஆராயும் அறிவியல்.
முறை அறிவியல் :. பட்டறிவில் கண்ட நிகழ்ச்சிகளை;
கருதல்களைப் பெறுவதற்கு உத
வும் அறிவியல்..

 

இரண்டாவதான 'முறை அறிவியலுள் இன்றியமை யாத துறைகள் கணக்கியல், அளவையியல் கோட்பாட்டியல் (Philosophy) என்பன.

இவை இக்கால அறிவியல் நுணுக்கங்கள், இந்நுணுக்கங் களின் மையமான ‘அளவையியல்’ பல நூற்றாண்டுகளுக்கு

அறி-2