பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அறிவியல் திருவள்ளுவம்

என்றில்லை. ஏனென்றால் அறிவு 'தீது ஓரிஇ, நன்றின்பால் உய்ப்பது”. (422) எனவே, அறிவு நன்மையைத்தான் தரும். இவ்வகையில் பரிமேலழகர் பொருள் பொருந்தாது.

"அறிவறிந்த கல்விச் செல்வமான பிள்ளை' என்றார் பரிதியார். கல்வி என்றாலே அறிவறியும் செயலுக்கு உரியதுதான். இது கொண்டு நோக்கினால் ’அறிவறிந்த’ என்றமை ஒரு சிறப்புக் கருத்துக்காக அமைக்கப்பட்டதாகக் கொள்ள வழியில்லை.

இவ்வாறே ’அறிவறிந்த' என்னும் சொல்லமைந்த மற்றைய இரண்டு குறட்பாக்களுக்கும் பொருள் காணப்பட்டது.

ஆனால் காலிங்கர் மற்றொரு பொருளைக் குறித்துள்ளார். ”அறிவினை முழுதும் அறிந்து” என்றார். இவ் விளக்கம்- 'அறிவினை அறிதல்' என்னும் விளக்கம் அறிவியலை அண்டிப் பார்க்கிறது.

அறிவதுதான் அறிவு என்றாலும் ’அறிவையே. அறிவது-அதனையும் முழுமையாக அறிவது’ என்பது சற்று அழுத்தமான கருத்தைக் காட்டுகிறது.

அறிவில் நுண்ணிய அறிவு சிறந்தது. நுண்ணிய அறிவின் செயற்பாடு பெரும் ஆக்கத்தை விளைவிக்கும். அதனால்தான் ”அறிவு உடையார் ஆவது அறிவார்” (427) என்றார். ஆவதாகிய ஆக்கத்தை அதனினும் புத்தாக்கத்தை அறிவு தரின் அது நுண்ணறிவால் விளைந்த விளைச்சல்.

அத்தகைய அறிவின் செயற்பாட்டால் விளையும் ஆக்கத்தைக் கண்டறிவதுதான் அறிவாகும். இவ்விளக்கத்