பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

37


ஆனால் "அறிவறிந்த ஆள்வினை இன்மைதான் பழி" ஆள்வினை இருந்தால் கண்பார்வையில்லாத குருடனும் வாழ்வில் சிறக்கலாம். நம்கால எலன் கெய்வர் முதல் இன்று நாட்டில் உலவும் உயர்ந்து திகழும் குருடர் பலர் பழி சொல்லப்படாதவர்கள். இது போன்றே ஆள்வினையால் மற்றையப் பொறிகள் இல்லாமல் உயர்ந்து பழியைப் புறங்கண்டோராக அறிகின்றோம்.

இக்குறள் இக்கருத்துக்களுடன் இக்காலப் பொறி அறிவியல் முன்னேற்றத்தையும் குறிப்பாகக் காட்டுகிறது என்று வெளிப்படுத்தலாம்.

இக்காலம் 'பொறி' என்பது செயற்கையில் உருவாக்கப்பட்டு இயங்கும் எந்திரங்களைக் குறிக்கிறது. நம் உடல் உறுப்புக்குரிய சொல்லாகிய பொறி” என்னும் பெயர் இன்று இயங்கும் எந்திரங்களுக்கு எவ்வாறு ஆனது?

உடலின் ஐந்து பொறிகளும் தாம் இயங்கி மற்ற வற்றை இயங்க வைக்கின்றவை. கண், பார்வையால் தான் இயங்கி மாந்தனை நடமாடி இயங்க வைக்கின்றது. பிற உடற்பொறிகளும் இவ்வாறே. இவைபோன்று இயங்கி இயங்க வைத்ததால் எந்திரங்களும் பொறி என்று குறிக்கப்படுகின்றன.

மேலும் விரித்து நோக்கினால் இக்காலத்தில் காணப்பட்டுள்ள பொறிகள் அனைத்தும் உடலின் பொறிகள் இயங்கும் நுணுக்க த்தை வைத்தே காணப்பட்டவை என்பதை அறியலாம்

கண்ணின் இயக்கத்தைப் பார்த்து நிழற்படப் பொறி காணப்பட்டது: பலவகையாக வளர்ந்தது. காதின் ஒலிவாங்கும் இயக்கத்தை வைத்தே ஒலிவாங்கிகள்: