பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அறிவியல் திருவள்ளுவம்

கிறது. கரியகை என்னும் (Carbon-DI-oxide) தாவர இனங்களை உயிர்ப்பிக்கிறது. எனவே, காற்றின்றி உயிரினம் இல்லை.

இக்காற்று பூவுலகைச் சூழ்ந்து வானத்தில் மேன் மேலே பரவியுள்ளது. இதனைப் பரவியுள்ளது என்று பொதுவாகக் கூறக்கூடாது. அடுக்கடுக்காகப் பரவி யுள்ளது. ஓரளவில் இவ்வடுக்குகளைப் பூவுலகின் அடித் தளத்திலிருந்து இவ்வாறு கொள்கின்றனர், ஒவ்வொரு அடுக்கும் 'வளிமண்டலம்' எனப்படும்.

வளிமண்டிலம் நிலத்தளத்திலிருந்து ஏறத்தாழ
அடிவளிமண்டிலம் (Troposphare) 10 கிலோ மீட்டர்
படுகை வளிமண்டிலம் (Stroposphare) 27 "
இடைவளிமண்டிலம் (Merosphare) 85 "
மின் துகள் வளிமண்டிலம் (Inosphare) 400 "
கவர்ப்பு மண்டிலம் (Magnetosphare) 400 இதற்கு மேல்

இவ்வடுக்குகளில் காற்று தன் அடர்த்தியால் வேறு பழிகின்றது. பூவுலகிலிருந்து மேலே செல்லச் செல்ல வெப்பம் மிகும். வெப்பம் மிக மிகக் காற்றின் அடர்த்தி குறையும், காற்றின் அடர்த்தி குறையக் குறைய உயிரினம் உயிர்த்தல் தொய்ந்து கொண்டே போகும்.

நிலபென்னும் தாய்

பூவுலகின் அடித்தள வளிமண்டிலத்தில் உயிரினங்களின் உயிர்ப்பு (மூச்சை இழுத்து விடல்) இயல்பாக அமையும். அடுத்த மேல் அடுக்கில் வளியின் அடர்த்தி சற்று குறையும். அங்கு உயிரினம் அமைந்தால் முன் இயல்பு சற்று நெகிழ்வு