பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

43

ஆகும். அடுத்த வளிமண்டிலத்தில் நெகிழ்வு நெருக்கமாகும். இவ்வாறே நெருக்கம் இறுக்கமாகி, தள்ளாடி, திணறி, திண்டாட்டத்தில் நிறுத்தும். மேல் வளிமண்டிலத்தில்மேல் உயர்ந்தால் உயிர்ப்பு நின்று போகும். அங்கு வாழ முடியாது.

உயிர்ப்புக்குரிய வளியை 'ஞாலம்' என்னும் தாய் வழங்குகிறாள். வழங்கி உயிரினங்களைத் தோற்றுவித்து உயிர்ப்புக்கும் வளிவழங்கி வாழவைக்கிறாள். இவ்வகையில் 'நிலம் ஒரு தாய்' என்பது பொருத்தமாகும். நிலத்தைத் திருவள்ளுவரும் "நிலமென்னும் நல்லாள்" என்றார்.

தாயின் மடியில் பிறந்த குழந்தை, தாயின் அரவணைப்பில் இயல்பாக அமையும். தாயின் அன்பு ஈனும் அருளும் கைக்குழந்தையைப் பேணிக் காக்கும். மடியைவிட்டு அகன்று சற்று எட்டப்போய்த் தவழ்ந்தாலும் குழந்தை பேணிக் காக்கப்படும். ஆனால், மடி அரவணைப்பு இல்லை. இவ்வாறே குழந்தை சற்றுச் சற்றே அகன்று போகப் போக தாயின் அன்பும் அருளும் இருந்தாலும் நேரடித் தழுவல் குறைகிறது. அகற்ற குழந்தை விளையாடினாலும் தாயின் இடைவெளி சற்று தளர்வையே தரும்.

இது போன்றே வானத்தின் மேல் மேலே வளிமண்டி லங்களில் உயிரினம் உயிர்ப்பில் தொய்வுபடும்.

வளி வழங்கும் ஞாலம்

இவ்வாறான நிலவியல், வானவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் வளியியல் அறிஞர் கெப்ளர் முதல் கலிலியோவரை தொடர்ந்து கண்டறியப் பெற்ற உண்மைகள். இக்கண்டுபிடிப்பின் அடையாளத்தைத்