பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அறிவியல் திருவள்ளுவம்

திருவள்ளுவர் காட்டினார். அஃதாவது இந்த ஞாலம் வளியை வழங்குகிறது. வழங்கி உயிரினங்களை வாழவைக்கிறது. இதனை

"வளிவளிங்கு மல்லல்மா ஞாலம்" என்றார் நம் திருவள்ளுவர். இத்தொடர் வான அறிவியலில் வளியின் தோற்றத்தைக் குறிக்கிறது. அதிலும் வளியை இந்த 'ஞாலத்தாய் ஈன்று தருகிறாள்' என்றும் குறிக்கிறது.

ஞாலத்தாய் வளியை வழங்கினாலும் அவளது அருளிப் பாட்டின் நெருக்கம் குறையக் குறைய உயிரினத்திற்கு. அல்லல் உண்டாகி வளரும். இதனையும் இத்தொடரின் தொடர்ச்சி அறிவிக்கிறது. "வளி வழங்குமல்லல், மாஞாலம்" என்று திருவள்ளுவர் ஒரு கருத்திற்குக் கரியாகசான்றாகக் கூறினார்.

        "அல்லல் அருள்.ஆள்வார்க்கு இல்லை (இதற்கு)
        வளிவழங்கு மல்லல் மாஞாலம் கரி" (சான்று)

என்றார். எதற்குச் சான்றாயிற்றோ அந்த அருளில்லா அல்லல் கருத்தும் வானத்து வளிமண்டில அடுக்குகளால் வளரும் அல்லலுக்கும் பொருந்துகிறது.

ஞாலத்தாயின் அன்புக் கவர்ச்சியை அறிய வேண்டும்.

நிலம் ஈர்ப்பு ஆற்றல் உள்ளது. மேலே சென்ற பொருளைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் கவர்ச்சி கொண்டது. இதனை அறிவியல் அறிஞர் ஐசக்கு நியூட்டன் றிவித்தார். நிலத்தின் ஈர்ப்பு ஆற்றல் மேலே வளிமண்டிலங்களில் போகப் போகக் குறையும் என்பதும் கண்டறியப்பெற்றது. இதன்படி ஞாலத்தின் அடித்தளச் சூழலில் ஈர்ப்பாற்றல் உயிரினத்தை இயல்பாக வாழவைக்