பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

47

உலகம் என்பதும் அவ்வாறே. ஆனால், திருவள்ளுவர் மனம் பற்றிய சொற்கள்; மனம்பற்றி இடமறிந்து ஆளப்பெற்ற சொற்கள்.

திருவள்ளுவர் மனம் பதித்த சொற்கள்

சங்க கால இலக்கியங்களில் இச்சொற்கள் பரவலாகக் கையாளப்பட்டுள்ளன. இவற்றுள் 'ஞாலம்' என்னும் சொல் கலித்தொகையில்தான் மிக அதிகமாக 12 இடங்களில் அமைந்துள்ளது. கலித்தொகைப் பாடல்களை எழுதியோர் ஐந்து புலவர்கள். ஐவருள் கபிலர் இச் சொல்லைக் கையாளவில்லை. எனவே, கலியில் உள்ள 12 இடங்களுக்கு நான்கு பேர் பங்காளிகளாகிறார்கள். இப்பங்காளிகள் ஒவ்வொருவரும் தனித்தனியே ஒன்று, இரண்டு, மூன்று இடங்களில்தான் கையாண்டனர்.

திருவள்ளுவர் தம் திருக்குறளில் 10 இடங்களில் இச் சொல்லைக் கையாண்டுள்ளார். தனியொரு புலவராக ‘ஞாலம்’ என்னும் சொல்லை அதிகம் கையாண்டவர் திருவள்ளுவர் ஒருவரே (சங்ககால நூல்களில்). இது கொண்டு இச்சொல்லில் திருவள்ளுவர் அதிக மனம் பற்றியமை புலப்படுகின்றது.

இது போன்றே 'உலகம்' என்னும் அறிவியல் கருத்து பொதிந்த சொல்லும் திருவள்ளுவரால்தான் அதிக இடங்களாக 22 இடங்களில் கையாளப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் 'உலகம்' என்னும் சொல் புறநானூற்றில் தான் அதிகமாக 39 இடங்களில் அமைந்துள்ளது. புற நானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் தெரிந்த அளவில் 154 பேர். 39 இடங்களில் பலர் பங்கு பெறவே இல்லை. எனவே, தனியொரு புலவராக 'உலகம்' என்னும் சொல்லைக் கையாண்டவர் திருவள்ளுவரே