பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்
துணைவேந்தர்
மாண்பமை முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களின்
அணிந்துரை

காலத்தை வென்று வாழ்வன நல்ல இலக்கியங்கள். அந்தச் சிறப்பிற்கு ஓர் இலக்கியம் தகுதிபெற வேண்டுமானால் அது உண்மையைப் பேச வேண்டும். வளரும் அறிவியல் அந்த உண்மையைப் பகுதிகளாக அறிந்து நமக்குத் தெளிவுபடுத்தும். அப்படி அறிவியலால் அடையாளம் காணப்படும் உண்மையின் பகுதிகள், ஏற்கனமே உருவாக்கப் பட்டுள்ள இலக்கியங்களுள் பொதிந்துள்ளன என்பதை உணர்ந்து, அந்தவாழும் இலக்கியங்களை ஆய்ந்தும், போற்றியும், பின்பற்றியும் மனித இன நன்மை பெறுகின்றது. அப்படிப் பெருமைபெறு இலக்கியங்களில், திருக்குறள் முதன்மையானது.


நல்லறிஞர்கள் பலரால், திருக்குறள் - திருவள்ளுவம் - நயம், சுவை, பொருள், இலக்கப்கோப்பு உள்ளிட்ட - பலவித ஆய்வுகளுக்குத் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், இலக்கியத்தின் இலக்கும் "உண்மை" என்பதாலும், அவ்வுண்மை அறிவியல் பகுதிகளாக அவ்வப்போது வெளிக்கொணரப் பட்டுக் கொண்டிருப்பதாலும், வாழும் இலக்கியத்தையும் வளரும் அறிவியலையும் இணைந்து ஆராய்வதும், ஆராய்ந்து இணைப்பதும் தேவையாகின்றது.