பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

63

'இவை மூன்றும் வயிற்றுத்தீயால் எரிக்கப்பட்டு முறையே கிராமுக்கு 4.4.9 உடல்வெப்ப அளவுகளை-கலோரிகளைத் (Calories) தருகின்றன’

என்னும் உணவின் செரிமான விளக்கம் இக்கால உணவு அறிவியலில் காணப்படுபவை.

இதில் செரிமானத்திற்குச் செய்யப்படும் வயிற்று வெப்பம் தருதல் வயிற்றுத் தீ’ எனப்பட்டது. புறநானூற். றில் சேரமான்கணைக்கால் இரும்பொறை "வயிற்றுத் தீத்தணிய"[1] என்று பாடினார்.

"வயிற்றுத் தீயார்க்கு உணவு வழங்கினார்"[2] என்று ஏலாதியில் கணிமேதையார் குறித்தார்.

திருவள்ளுவர்,

        "தீ அளவின்றித் தெரியாள் பெரிதுண்ணின்
        நோய் அளவின்றிப் படும்" (946)

என்றார். வயிற்றுத் தீயின் அளவு தெரிந்து அஃதாவது வயிற்றுத் தீயை அளவாக வைக்கும் அளவான உணவே உண்ணவேண்டும் என்பதை அறிந்து அளவான உணவை (சீருைைவ) உண்ண வேண்டும். அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் உண்டாகும்-என்று செரிமானக் காரணமும் கூறினார். இஃது முன்னர் "அற்றால் அளவறிந்து உண்க' என்றதற்கும் கழிபேரிரையான்கண் நோய்' என்றதற்கும் காரண விளக்கமாகும்.

முன்னே கண்ட இக்கால உணவு அறிவியலின் கண்டு பிடிப்புக்களான கருத்தேற்றங்களின் உள்ளீடாக "தி


  1. கணைக்கால் இரும்பொறை : புறம் : 74-5
  2. கணிமேதையார் : ஏலா : 57-2